சனி, 9 டிசம்பர், 2017

குஜராத் தேர்தல் பரப்புரையின் போது வளர்ச்சி குறித்து பிரதமர் பேசாதது ஏன்?" - ராகுல் காந்தி December 9, 2017

Image

குஜராத் தேர்தல் பரப்புரையின் போது வளர்ச்சி குறித்து பிரதமர் பேசாதது ஏன் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், கடந்த 22 ஆண்டுகளாக குஜராத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக, அதன் ஆட்சி குறித்து தான் எழுப்பிய 10 கேள்விகளில் ஒரு கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். 

வெறும் பேச்சு மட்டும்தான் பாஜக ஆட்சியில் நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். முதல் முறையாக வாக்களிக்கும் அதிகாரம் பெற்றுள்ள இளம் வாக்காளர்கள் தங்கள் வாக்கை தவறாமல் அளித்து ஜனநாயகம் வெற்றி பெறுவதற்கான பங்களிப்பை அளிக்குமாறும் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.