சத்தியமங்கலம் பவானி ஆற்றில் குளித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பெண்கள் நீரில் மூழ்கி பலியாகினர்.
உதகையைச் சேர்ந்த பர்வீன், அவரது மகள் ரகுமத்திஷா மற்றும் அவர்களது உறவினர்களான பத்ருநிஷா, பிரதிஷா ஆகியோர் சத்தியமங்கலம் தபால் அலுவலக வீதியில் உள்ள இதயத்துல்லா என்பவரின் வீட்டுக்கு வந்துள்ளனர்.
இதில் ரகுமத்திஷா மனநலம் குன்றியவர். அவர்கள் 4 பேரும் பவானி ஆற்றுக்கு சென்று குளித்துள்ளனர். அப்போது ரகுமத்திஷா ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினார். இதனை பார்த்த அவரது தாயார் பர்வீன் மற்றும் மற்ற இருவரும் ரகுமத்திஷாவை காப்பாற்ற முயன்றனர். அப்போது மூன்று பேரும் நீரில் மூழ்கினர். 4 பேரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் ரகுமத்திஷா, பத்ருநிஷா, பர்வீன், பள்ளி மாணவி பிரதிஷா ஆகியோரை சடலமாக மீட்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.