வியாழன், 11 ஜனவரி, 2018

புதிய முத்தலாக் தடை சட்டத்தால் நடக்கப் போவது என்ன ? நாம் செய்யப் போவது என்ன ?

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ 
அல்லாஹ்வின் சட்டமே மேலோங்கும்.
புதிய முத்தலாக் தடை சட்டத்தால் நடக்கப் போவது என்ன ?
நாம் செய்யப் போவது என்ன ?
பல நாட்கள் இரவு பகலாக அமர்ந்து நீதிபதிகள் இயற்றிய முத்தலாக் தடை சட்டத் தீர்ப்பு அவர்களையே அறியாமல் மத்ஹபு வாதிகளால் முடக்கப்பட்டிருந்த அல்லாஹ்வின் தலாக் சட்டம் செயல்வடிவம் பெறுவதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.
இறைமறுப்பாளர்கள் வெறுத்தபோதிலும் அல்லாஹ் தன் கட்டளையை நிறைவேற்றியே தீருவான் என்று இதை தான் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.
...அல்லாஹ் தனது கட்டளைகள் மூலம் உண்மையை நிலைநாட்டவும், (தன்னை) மறுப்போரை வேரறுக்கவும் விரும்புகிறான். 
அல்குர்ஆன்.8:7
குற்றவாளிகள் வெறுத்தபோதும் உண்மையை நிலைநாட்டி, பொய்யை அழித்திட அவன் நாடுகிறான்.
அல்குர்ஆன்.8:8
ஒரு பக்கம் முஸ்லீமாக இருந்துக்கொண்டே தலாக் விஷயத்தில் அல்லாஹ்வின் சட்டத்தை முழுமையாக அறியாமல் அல்லது அறிந்துகொண்டு முன்னோர்கள் இயற்றிய மத்ஹபு சட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து  அல்லாஹ்வின் சட்டத்தை புறந்தள்ளி  வந்தனர் .
மற்றொரு பக்கம் இஸ்லாமிய சட்டத்தில் கை வைத்து சிதைக்க வேண்டும் என்ற சங்பரிவாரின் நீண்ட நாள் திட்டம்.
இந்த இரண்டு வகையறாக்களின் சூழ்ச்சியை முறியடித்து தலாக் விஷயத்தில் தனது கட்டளையை இந்த புதிய தடை சட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் அல்லாஹ் லோங்கச் செய்வான்..
முத்தலாக் கூறினால் மூன்று வருடம் ஜெயிலும், ஜீவானாம்சமும் வழங்க வேண்டும் என்ற சட்டத்தை இயற்றி உள்ளனர்.
இந்த சட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டால் சிறை தண்டனைக்கும், ஜீவனாம்சத்திற்கும் பயந்து குர்ஆன் கூறும் முத்தலாக் சட்டத்தை ஒவ்வொரு தலாக்கிற்கும் இடையில் மூன்று மாத கால இடைவெளியை பின்பற்றுவதற்கு மக்கள் தயாராகுவார்கள் அந்த இடைவெளியில் அல்லாஹ் இணக்கத்தை ஏற்படுத்துவான் தலாக்குகள் குறைவதற்கு பெருமளவு வாய்ப்பு இருக்கும் இன்ஷா அல்லாஹ்.
இதற்கு பெயிலும் இல்லாத காரணத்தால் சிறையில் இருக்கும் மூன்று வருடகாலமும் அரசு அவனுடைய தலாக் விடப்பட்ட மனைவிக்கு ஜீசவனாம்சம் கொடுக்குமா ? அல்லது சிறையில் மாத சம்பளம் வழங்குமா ? என்ற கேள்விக்கு சட்டத்தை இயற்றிய மெத்தப் படித்த மேதாவிகள் (நீதிபதிகள்) பதில் சொல்ல வேண்டும் ?
அடுத்தது இவர்கள் முத்தலாக் தடை சட்டத்தை சரியாக இயற்றினார்களோ, தவறாக இயற்றினார்களோ ? ஆனால் முஸ்லிம்களின் திருமண சட்டத்தில் தலையிடுவதில்லை என்ற இந்திய அரசியல் சாஸன சட்டத்தை மீறி இந்த முத்தலாக் தடை சட்டத்தை இவர்கள் இயற்றியதற்கு எதிராக கடுமையான போராட்டத்தை முஸ்லிம்கள் நடத்த வேண்டும் ! இதற்கு முஸ்லீம்கள் தயாராக வேண்டும். 
சமுதாயத்திற்கு சிறு பிரச்சனை என்றாலும் முதலில் களம் இறங்குவது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தான் அதனால் இது விஷயமாக நம்முடைய ஜமாத் சிற்நத ஒரு முடிவை மேற்ளும் இன்ஷா அல்லாஹ்.
இதையடுத்து மதஹ்பில் இருக்கும் ஒரே நேரத்தில் மூன்று முறை கூறும் முத்தலாக் சட்டத்தை தடை செய்வதற்கான அனைத்து வழிகளையும் கண்டறிந்து களையப்படுவதற்கும் முயற்சிக்க வேண்டும்.
மனிதனின் வாழ்க்கைக்காக வழங்கப்பட்ட அல்லாஹ்வின் தனித்துவம் மிகுந்த சரியான சட்டம் மேலோங்க வேண்டும்.

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விடமாட்டான். 
அல்குர்ஆன்.9:32