பழனியில் மருந்தகம் அருகே சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ரயில்வே பீடர் சாலையில் அரசு மதுபானக் கடை உள்ளது. மதுபானக்கடையை ஒட்டியே மருந்தகம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு டாஸ்மாக் கடை அடைக்கப்பட்ட நேரங்களில் மருந்தகம் அருகே சட்டவிரோதமாக மதுவிற்பனை நடைபெறுவது பொதுமக்களை முகம் சுழிக்க வைப்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் நேற்று குடியரசு தினம் என்பதால் அரசு டாஸ்மாக் கடைகள் அனைத்தும் விடுமுறை என்பதால் மருந்தகம் அருகே உள்ள மதுபான பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றது.
இதனால் மருந்து வாங்க வந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர்கள் மருந்தகத்திற்கு அடிக்கடி சென்று வந்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதுபோல் அமைந்தது.