புதன், 24 ஜனவரி, 2018

ராஜிவ்காந்தி கொலை வழக்கு கடந்து வந்த பாதை! January 24, 2018

Image

ராஜிவ் கொலை வழக்கில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்ளிட்டோர் சிறையில் வாடும் நிலையில், அவர்களை விடுவிக்க கோரும் வழக்கு கடந்த வந்த பாதையை தற்போது பார்ப்போம்.

ராஜிவ்காந்தி கொலை வழக்கு கடந்து வந்த பாதை:

மே 1991 

➤ ஸ்ரீபெரும்புதூர் வந்திருந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி, தற்கொலைப்படைத் தாக்குதலால் கொலை செய்யப்பட்டார்.

ஜனவரி 1998 

➤ ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உட்பட 26 பேருக்குத் தடா நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்தது. 

மே 1999 

➤ முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோரின் தூக்கு தண்டனையை உறுதிப்படுத்தியது. - உச்சநீதிமன்றம் 

அக்டோபர் 1999 

➤ நால்வரின் கருணை மனு தமிழக ஆளுநரால் நிராகரிக்கப்பட்டது

ஏப்ரல் 2000 

➤ அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப் பரிந்துரை செய்தார்.

ஏப்ரல் 2000 

➤ சோனியா காந்தியின் தலையீட்டால் நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றம் செய்யப்பட்டது.

மார்ச் 2008 

➤ நளினியுடன் பிரியங்கா காந்தி வேலூர் சிறையில் சந்திப்பு 

ஆகஸ்ட் 2011 

➤ முருகன், சாந்தன், பேரறிவாளன் கருணை மனுக்களை அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நிராகரித்தார். 

ஆகஸ்ட் 2011 

➤ மூவரின் தூக்கு தண்டனையைக் குறைக்க வேண்டுமெனத் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிப்ரவரி 2014 

➤ மூவரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்து, அதனை ஆயுள் தண்டனையாக குறைத்து  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

➤ தூக்குத்தண்டனை ரத்தானதும் முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

மார்ச் 2014

➤ தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

மார்ச்  2014

➤ தமிழக அரசின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

டிசம்பர் 2015 

➤ 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

டிசம்பர் 2015 

➤ 20 ஆண்டுகள் நிறைவடைந்த ஆயுள் கைதிகளை முன்கூட்டி விடுதலை செய்யும் திட்டத்தின் கீழ் விடுதலை செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்தார். 

மார்ச் 2016 

➤ 7 பேரை விடுவிப்பது குறித்து மத்திய அரசுக்குத் தமிழக அரசு கடிதம் எழுதியது.

ஏப்ரல் 2016 

➤ 7 பேரை விடுவிப்பது குறித்த தமிழக அரசின் கோரிக்கையை நிராகித்தது மத்திய அரசு 

ஜனவரி 2018

➤ பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது குறித்து மத்திய அரசு 3 மாதத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது