புதன், 24 ஜனவரி, 2018

தெரிஞ்சிக்கலாம் வாங்க...



நன்றி குங்குமம் முத்தாரம்

ஜன்னல் கண்ணாடி வழியாக வரும் சூரிய ஒளியில் வைட்டமின் டி பெற முடியுமா?

சர்வ நிச்சயமாக நோ. சூரிய ஒளி நேரடியாக உடலின் தோலில்பட்டு வேதிமாற்றங்கள் நிகழ்ந்து வைட்டமின் டி உருவாகிறது. இதற்கு சூரிய ஒளியிலுள்ள புற ஊதாக்கதிர்களின் உதவி தேவைப்படுகிறது. ஜன்னல் கண்ணாடி இதனை தடுப்பதால், அதில் ஊடுருவி நமது உடல் மீது படும் சூரிய ஒளியில் வைட்டமின் டி கிடைப்பதில்லை. இதை ஈடு செய்ய மீன் அல்லது பால் சார்ந்த பொருட்களை சாப்பிடும் தேவை அதிகரிக்கிறது.

பாம்புகள் தம் விஷத்தை எப்படி தயாரிக்கின்றன?

பாம்புகள் தம் விஷத்தை உமிழ்நீர்ச் சுரப்பி மூலம் தயாரித்துக்கொள்கின்றன. சாதாரணமாக எச்சிலில் உணவை செரிமானம் செய்வதற்கான என்சைம்கள் மட்டுமே இருக்கும். ஆனால் பாம்புகளின் உமிழ்நீரில் நச்சு என்சைம்கள் இலவச இணைப்பு. ராஜநாகத்தின் உமிழ்நீரிலுள்ள புரத நச்சு பிற உயிரிகளின் புரதத்தை விட பெருமளவு மாறுபட்டது. இரையின் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை முறியடிக்கும் வகையில் 50-100 விகிதத்தில் பாம்பின் உடலில் புரதம் உற்பத்தியாகிறது. இதனால் இரையை செரிக்கும்போது பாம்பின் உடலில் ரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை, ரத்தம்  உறைதல் ஆகிய பிரச்னைகள் ஏற்படுவதில்லை.