சனி, 27 ஜனவரி, 2018

​கொல்கத்தாவில் 10 கோடியில் அசத்தலான ‘மிதக்கும் சந்தை’ - வங்க முதல்வர் மம்தா தொடக்கம்! January 26, 2018

Image

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் மிதக்கும் சந்தை அமைக்கப்பட்டுள்ளது.

தெற்கு கொல்கத்தாவில் உள்ள படுலி என்கிற ஏரியில் இத்தகைய சந்தை ஏற்கப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 400 மீ நீளம், 60 மீ அகலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த சந்தையை மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி திறந்துவைத்துள்ளார்.

இச்சந்தையில் காய்கறிகள், பூக்கள், மீன்கள், இறைச்சி ஆகியன விற்கப்படுகின்றன. ஏரிக்கு நடுவில் அமைக்கப்பட்டுள்ள மரத்தினால் ஆன மேடைகளில் நின்று வாங்கும் வகையிலும், ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு படகில் செல்லும்படியும் இந்த சந்தை அமைக்கப்பட்டுள்ளது. படகில் வந்து வியாபாரிகள் தங்களுடைய பொருட்களை விற்பனைசெய்யும் காட்சி கண்கவர் வகையில் அமைந்துள்ளது. மொத்தம் 114 படகுகள் இந்த ஏரியில் இருக்கின்றன.

தாய்லாந்து, வெனிஸ், காஷ்மீர், வியட்நாம் போன்ற நாடுகளில் சர்வதேச சுற்றுலா இடங்களில் இருக்கும் மிதக்கும் சந்தைகளைப் போல இந்த சந்தை இருக்கிறது என்று பலரும் கருத்து சொல்கிறார்கள். இந்த சந்தையை அமைக்க 10 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது ஆச்சரியப்படுத்தியுள்ளது.