செவ்வாய், 23 ஜனவரி, 2018

​சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் மக்கள் பணியகம் தொடங்கும் ஜெயானந்த் திவாகரன்! January 23, 2018

Image

சசிகலாவின் சகோதரர் மகன் ஜெயானந்த் திவாகரன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் மக்கள் பணியகம் ஒன்றை தொடங்கி அதன் லோகோவை சுபாஷ் சந்திரபோஸின் 121வது பிறந்த தினமான இன்று அவருடைய ஃபேஸ்புக் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 16ம் தேதி மாவீரன் சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் மக்கள் பணியகம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பெயரில் “போஸ் மக்கள் பணியகம்” அமைக்கபட்டு அதில் அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு முக்கியதுவம் அளிக்கபட்டு மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் வகையில் பணிகள் செய்ய இருப்பதாக ஜெயானந்த் திவாகரன் தெரிவித்திருந்தார். இந்த மக்கள் பணியகத்திற்காக தமிழகம் முழுவதும் பொறுப்பாளர்கள் அறிவிக்கபட்டு அவர்களின் கருத்துகளை பரிமாறி கொள்ள தனியாக ஒரு சமூக வலைதளம் உருவாக்கபடும் எனவும் அதில் மக்களின் எளிய வாழ்கையில் வரும் பிரச்சனைகள் மற்றும் இன்னல்களுக்கு தீர்வுகாண கடும் முயற்சி எடுக்கபடும் எனவும் கடந்த ஜனவரி 16ம் தேதி ஃபேஸ்புக சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

மேலும் இந்த மக்கள் பணியகம் ஆர்.கே. நகர் தொகுதியில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற தினகரன் எம்.எல்.ஏவுக்கு எதிராக தொடங்கப்படும் இயக்கம் என விமர்சனங்கள் எழுந்த நிலையில், மக்கள் பணியகம் ஒரு தொண்டு நிறுவனம் என்றும், ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதற்காக தொடங்கப்பட்ட ஒரு அமைப்பு என்றும் தெரிவித்திருந்தார். மேலும் தான் எப்போதுமே டி.டி.வி. தினகரன் அவர்களுக்கு கட்டுப்பட்டவன் என்றும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் “போஸ் மக்கள் பணியகத்தின்” லோகோவை ஜெயானந்த் திவாகரன் இன்று அவருடைய ஃபேஸ்புக் சமூகவலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts:

  • எது தேசதுரோகம்? பேராசிரியர் சாந்தி உரை! எது தேசம்? எது துரோகம்? ஜே.என்.யூ மாணவர் – பேராசிரியர் போராட்டத்தை ஆதரித்து மார்ச் 3, 2016 என்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் … Read More
  • சிவப்பு சந்தை அதிர வைக்கும் உறுப்பு விற்பனை! சமீபத்தில் வெளியான ‘என்னை அறிந்தால்’, ‘காக்கிச்சட்டை’ படங்களைப் பார்த்திருப்பீர்கள். அதன் மூலம் சிவப்பு சந்தை – அதாவது, ‘ரெட் மார்க்கெட்’ என்… Read More
  • உயிரைப் பறிக்குமா உருளைக் கிழங்கு? முளைவிட்ட உணவுகள்ஊட்டம் நிறைந்தவை என்று கேள்விப்பட்டிருப்போம். அதுவே உருளைக்கிழங்கில் முளைவிட்டிருந்தாலோ, பச்சை நிறத்திட்டுகள் காணப்பட்டாலோ, … Read More
  • தினை உடலுக்கு பலத்தை தரும் தினை தினை தமிழகத்தில் தொன்று தொட்டே இருந்து வரும் சிறு தானியமாகும். இதை ஆங்கிலத்தில் பாக்ஸ்டெயில் மில்லட் என்று அழைப்பார… Read More
  • வெற்றிலைக்கு வெரிகுட் வயிறார உணவருந்திய பின் வெற்றிலை பாக்கு போட்டால்தான் விருந்தே திருப்திகரமாக முடிந்த உணர்வு பலருக்கும் இருக்கும்.  தாத்தாக்களும் பாட்டிக… Read More