ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்துள்ளதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில், யானைகள், மான், சிறுத்தை, புலி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. வனசரகத்தை பாதுகாக்கும் பொருட்டு அரசு சார்பில் மரங்கள் வளர்க்கப்படுகின்றன.
அதற்காக செடிகள் கொண்டுவரப்படும் போது, செடிகளை மட்டும் எடுத்துக்கொண்டு பிளாஸ்டிக் குப்பைகளை ஆங்காங்கே போட்டுவிட்டு சென்றுவிடுவதால் விலங்குகள் பிளாஸ்டிக் குப்பைகளை சாப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இந்த பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதால் இதுபோன்று நடப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.