புதன், 24 ஜனவரி, 2018

இறந்த உடல் தண்ணீரில் மிதப்பது ஏன்?



பொதுவாக நீரை விட குறைவான அடர்த்தியுள்ள பொருட்கள் நீரில் மிதக்கவும், அடர்த்தியான பொருட்கள் மூழ்கவும் செய்கின்றன. இறந்த மனிதனது உடல் நீரில் மிதப்பது ஆர்கிமிடிஸ் தத்துவத்துடன் அடிப்படையில் ஆகும். ஒரு பொருள் நீரில் மூழ்கும் போது அதனால் வெளியேற்றப்படும் நீரின் அளவு அப்பொருளின் கனஅளவிற்கு சமமாக இருக்கும். இதுவே ஆர்க்கிமிடிஸ் தத்துவம் ஆகும். மனிதனின் உடல் நீரின் அடர்த்தியை விட குறைவானதே. அதனால் நீரில் விழுந்து விட்டால் உயிரோடு இருக்கும் போதும் சில வினாடிகள் மிதக்கவே செய்வான். 

ஆனால் அவது வாய், மூக்கு வழியாக உடலுக்குள் நீர் செல்வதால் அவனது அடர்த்தி நீரின் அடர்த்தியை விட அதிகரித்து விடுகிறது. எனவே நீரில் மூழ்கி விடுகிறான். அம்மனிதன் ஒருவேளை இறந்துவிட்டால் அவனது உடல் நீரிலேயே கிடந்து விரிவடைகிறது. உடலின் கன அளவு அதிகரிக்கும் போது தானாகவே அதன் அடர்த்தி குறைந்து விடுகிறது. எனவே இறந்த உடல் மேலே எழும்பி மிதக்க ஆரம்பிக்கிறது. இதை ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தின் அடிப்படையில் கூறுவதானால் இறந்த மனிதனது உடலால் வெளியேற்றப்பட்ட நீரின் எடை அவனது உடல் எடையை விட அதிகரித்து விடுகிறது. ஆதலால் இறந்த மனிதனது உடல் நீரில் மிதக்கிறது.