புதன், 24 ஜனவரி, 2018

காஷ்மீரில் இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலின் கீழே படுத்து சாகசம்: சமூக வளைதளங்களில் கடும் எதிர்ப்பு



ஸ்ரீநகர்: காஷ்மீரில் இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலின் கீழே தண்டவாளத்தில் படுத்து செய்த சாகசம் அதரிச்சியை ஏற்படுத்தியுள்ளது. யார் என்று அடையாளம் தெரியாத அந்த காட்சியில் இளைஞர் தனது நண்பர்களை வீடியோ எடுக்கும் படி கூறியவிட்டு ரயிலை எதிர்பாத்து தண்டவாளத்தில் தலைகுப்புற படுத்துக் கொண்டார். அதிவேகமாக வந்த ரயில் அவரை கடந்து சென்றுள்ளது. 

ரயில் கடந்து சென்றதும் ஏதோ சாகசம் புரிந்தவர் போன்று மகிழ்ச்சியுடன் அந்த இளைஞர் வரும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது முட்டாள் தனமான செயல் என்று சமூக வளைதளங்களில் கண்டனம் எழுந்துள்ளது. இதுபோன்ற விபரிதமான விளையாட்டுகளில் யாரும் ஈடுப்பட கூடாது என்று ரயில்வே துறை எச்சரித்துள்ளது

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=369943

Related Posts: