வெள்ளி, 19 ஜனவரி, 2018

சீனாவின் ‘பெய்ஜிங்’ வரை சென்று தாக்கும் அக்னி ஏவுகணை! January 18, 2018

Image

இந்தியாவின் பூடான் எல்லையிலிருந்து சீனாவின் தலைநகரான பெய்ஜிங் வரை சென்று தாக்கக்கூடிய அக்னி-5 ஏவுகணையை சோதித்துள்ளது. ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் சோதனைத் தீவில்  இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பதில் அளித்துள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சோதனை நடந்ததை உறுதிசெய்துள்ளார்.

இந்த ஏவுகணை இதற்கு முந்தைய அக்னி ஏவுகணைகளைவிட மிகவும் முன்னேறியதாக கருதப்படுகிறது. அக்னி -1 700 கி.மீ தூரமும், அக்னி -2 2000 கி.மீ தூரமும், அக்னி - 3 மற்றும் அக்னி - 4 3500 கி.மீ தூரமும் சென்று இலக்குகளைத் தாக்கும் திறன் உடையது. அக்னி 5 ஏவுகணை 5,000 கி.மீ இலக்கு சென்று தாக்கும் திறனுடையது.

இதன் மூலம் எஸ்.எப்.சி எனப்படும் திட்டமிட்டு குறிக்கோள்களைத் தாக்கும் சிறப்பு ஆயுதங்களுக்கான பிரிவை இந்தியா மேலும் வலுப்படுத்தியுள்ளது.

இந்த அக்னி - 5 ஏவுகணை ஏற்கனவே டிசம்பர் 26, 2016 அன்று சோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.