வெள்ளி, 19 ஜனவரி, 2018

​தபோல்கர், கௌரி லங்கேஷ் வரிசையில் வைரமுத்துவை படுகொலை செய்யத் திட்டம் - மனிதநேய மக்கள் கட்சி! January 19, 2018

Image

தபோல்கர் கௌரி லங்கேஷ் போன்றவர்கள் படுகொலை  செய்யப்பட்ட வரிசையில் வைரமுத்துவை கொலை செய்ய பிஜேபியினர் திட்டமிட்டுள்ளனர் என்றும், வைரமுத்துவை மனித நேய மக்கள் கட்சியினர் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுவோம் என்றும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மனிதநேய மக்கள் கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் சையது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹஜ் மானியம் ரத்து கவலை அலிக்கவில்லை ஆனால் மத்திய அரசு எங்களுக்கு செய்த துரோகத்தை எண்ணி தான் நாங்கள் வருந்துகிறோம் என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து ஹெச் ராஜா போன்றவர்கள் ரவுடிதனமான அரசியல் செய்து வருகின்றனர் இது நம் நாட்டிற்கு ஏற்புடையதாக  இல்லையென்றும் ஒரு வெறுப்பு அரசியலை மத்திய அரசு பிரகடனம் செய்துகொண்டு இருக்கிறது இது நம் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் படி உள்ளதுதாகவும் குறிப்பிட்டார்.

ஆண்டாள் சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த அவர், எழுத்தாளர்கள் தபோல்கர் கௌரி லங்கேஷ் போன்றவர்கள் படுகொலை  செய்யப்பட்டு உள்ளனர் அந்த வரிசையில் வைரமுத்துவை கொலை செய்ய பிஜேபி யினர் திட்டமிட்டுள்ளனர் என்றும்,  வைரமுத்துவை  மனித நேய மக்கள் கட்சியினர் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுவோம் என்றும் தெரிவித்தார்.

source
http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/19/1/2018/mmk-andal-issue

Related Posts: