திருப்பூரில் போலி விசா பயன்படுத்தி தங்கியிருந்த 6 நைஜீரிய நாட்டை
சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் கல்லூரி சாலையில் வழக்கம் போல வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த வடக்கு காவல் துறையினர் அந்த வழியாக வந்த நைஜீரியர்களை நிறுத்தி விசாரித்ததில், அவர்களிடம் வாகனங்களுக்கான ஆவனங்களும் ஓட்டுநர் உரிமமும் இல்லை என தெரியவந்தது மேலும் அவர்கள் போலி விசா மூலம் தங்கியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, 6 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 6 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.