
வல்லூர் அனல் மின் நிலைய கழிவுகளை கொட்டுவதற்கு, கொசஸ்தலை ஆற்றை ஆக்கிரமித்து, சாம்பல் குளம் கட்டப்படுவதை எதிர்த்து, கிராமமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
காட்டுக்குப்பத்தில் வசிக்கும் மீனவ கிராம மக்கள், வல்லூர் அனல் மின்நிலையம் முன்பு இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த பொன்னேரி வட்டார வருவாய் அலுவலர், வல்லூர் அனல் மின் நிலைய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனை அடுத்து, சாம்பல் குளம் அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. குடியரசு தினத்திற்கு பிறகு, அனைத்து தரப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்தி சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, போராட்டத்தில் ஈடுபட்ட மீனவ மக்களிடம், அரசு அதிகாரிகள் உறுதி அளித்தனர்.