ஜனவர் 31ஆம், 150 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் வானியல் அற்புதத்தை நாம் காண இருக்கிறோ. அது தான் ‘சூப்பர் ப்ளூ சந்திர கிரகணம்’.
ஆராய்ச்சியாளர்கள், வானியலாளர்கள் மற்றும் பொதுமக்களும் இந்த நிகழ்வைக் காண ஆவலாய் காத்திருக்கின்றனர்.
அன்றைய தினம் மூன்று தனித்துவம் வாய்ந்த நிகழ்வுகளை ஒருசேர காண இருக்கிறோம்.
முதலாவதாக, வரும் ஜனவரி 31ல் சந்திரன் பூமிக்கு மிக அருகில் உள்ள அதன் சுற்றுவட்டப் பாதையில் (Perigee) நிலை கொண்டிருக்கும். இதன் மூலம் வழக்கமான நிலவொளியைக் காட்டிலும் 14% கூடுதல் வெளிச்சத்தை சந்திரனிடம் அன்று காணலாம்.
இரண்டாவதாக, ஒவ்வொரு மாதத்திலும் ஒரு முறையே முழு நிலவினை (பவுர்ணமி) காண முடியும், ஒவ்வொரு முழு நிலவும் 29 நாட்களுக்கு ஒரு முறையே காண முடியும். ஆனால் இந்த முறை ஜனவரி 1ஆம் தேதியே முழு நிலவு தோன்றியது, மிகவும் அரிதாக மாதக் கடைசியான 31ஆம் தேதி இரண்டாவது முறையாக முழுநிலவு தோன்ற உள்ளது. இதுவே Blue Moon என்று அழைக்கப்படுகிறது.
இருப்பினும் மூன்றாவது நிகழ்வே இந்த முழுநிலவை அரிதிலும் அரிதான தனித்துவம் வாய்ந்ததாக மாற்றுகிறது. அன்றைய தினம் முழு சந்திர கிரகணம் தோன்ற இருக்கிறது.
அதாவது பூமியின் நிழலில் நிலவு கடந்து போகும். இதுவே ப்ளூ மூன் சந்திர கிரகணம் எனப்படுகிறது.
வரும் 31ஆம் தேதி, மாலை 5.18 மணிக்கு சந்திர கிரகணம் தோன்ற ஆரம்பிக்கும், முழு கிரகணம் 6.21 மணிக்கு தொடங்கி 7.37 மணி வரை நீடிக்கும். மொத்தம் 1 மணி நேரம் மற்றும் 16 நிமிடங்களுக்கு சந்திர கிரகணம் நீடிக்கும் என்று கொல்கத்தா பிர்லா கோளரங்க இயக்குனர் கூறியுள்ளார்.
பொதுமக்கள் இதனைத் காண சென்னையிலுள்ள பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக 1886ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி, ப்ளூ சூப்பர்மூன் சந்திர கிரகணம் தோன்றியது குறிப்பிடத்தக்கது.