செவ்வாய், 23 ஜனவரி, 2018

​இந்தியாவிற்கு வந்துவிட்டது வாட்ஸ்-ஆப் பிசினஸ் ஆப்! January 23, 2018

Image
இந்தோனேசியா, இத்தாலி, மெக்சிகோ, அமெரிக்கா, இங்கிலாந்து முதலிய பல்வேறு நாடுகளில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ் ஆப் பிசினஸ் பதிப்பு, இன்று இந்தியாவிலும் பிரேசிலிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.
                                                         

1.3 பில்லியனிற்கும் அதிகமான பயனீட்டாளர்களைக் கொண்ட வாட்ஸ் ஆப், சிறு முதலீட்டாளர்களை கவரும் வகையில் பிசினஸ் ஆப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது. 

சிறு முதலீட்டாளர்கள், தனது வியாபாரம் குறித்த விவரங்களை பதிவு செய்து, வாடிக்கையாளர்களிடம் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல், வாடிக்கையாளர்கள் அதிகம் கேட்கப்படும் கேள்விகளுக்கு குறுகிய நேரத்திற்குள் பதிலளித்துவிடவும், அலுவலக விலாசத்தினை வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்கும் வகையிலும் இருக்கிறது.

பயனீட்டாளர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, தேவையற்றவர்கள் நம்மை தொடர்பு கொள்ளாமல் தடுத்தல் முதலிய பல்வேறு வசதிகளை பிசினஸ் ஆப் கொண்டுள்ளது. 

இன்று தான் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தங்களது தொழில் வளர்ச்சிக்கு பிசினஸ் ஆப் நிச்சயம் உதவிகரமாக அமையும் என சிறு முதலீட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த செயலியை, கூகுல் ப்ளே ஸ்டோரிலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 4.0.3 மற்றும் அதற்கு மேல் உள்ள ஆண்ட்ராய்டு பதிப்புகளில் இந்த செயலியை பயன்படுத்தமுடியும். விரைவில் ஐ.ஓ.எஸ் இயங்குதள பதிப்பும் வெளியிடப்படும் என தெரிகிறது.