தமிழகத்தில் மீண்டும் ஒரு மொழிப்போர் உருவாகும் நேரம் வந்து விட்டதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடலூரில் திமுக சார்பில் மொழிபோர் தியாகிகள் வீரவணக்க பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழ்தாய்க்கு தற்போது அவமானம் ஏற்பட்டுள்ளது என்றும், விஜயேந்திரர் வருத்தம் தெரிவிக்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தற்போது நடப்பது ஆன்மிக அரசியலா என சந்தேகம் வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கல்வி கொள்கை என்ற பெயரில் பல்கலைக்கழகங்களில் இந்தி திணிப்பு நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டிய ஸ்டாலின், தமிழகத்தில் மிண்டும் ஒரு மொழிப்போர் உருவாகும் நேரம் வந்து விட்டது என்றும் கூறினார்.