வியாழன், 25 ஜனவரி, 2018

சிம்லாவில் துவங்கியது பனிப்பொழிவு! January 24, 2018

Image

சிம்லாவில் பனிப்பொழிவு துவங்கியுள்ளது சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஹிமாச்சல பிரதேசத்தின் தலைநகரான சிம்லா, இமயமலையில் அமைந்துள்ள ஒரு எழில்மிகு நகரமாகும். பிரிட்டிஷ் இந்தியாவின் கோடைகால தலைநகரமாகவும் செயல்பட்ட பெருமை கொண்டது சிம்லா.

இந்த சீசனில் முதல் பனிப்பொழிவு தற்சமயம் சிம்லாவில் தொடங்கியுள்ளது. பனிப்பொழிவு காரணமாக வெள்ளை போர்வையால் போர்த்தியது போன்று சிம்லா காட்சியளிக்கிறது. 

காணும் இடமெல்லாம் பனியால் போர்த்தப்பட்டிருப்பது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதன் காரணமாக சிம்லாவுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

சிம்லா மட்டுமல்லாமல், வைஷ்னோ தேவி ஆலயம், நைனிதால், காஷ்மீர் மற்றும் உத்தரகாண்டின் சில பகுதிகளிலும் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. பனிப்பொழிவு மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.