கன்னியாகுமரியில் ஓகி புயலால் வீடுகள் சேதம் அடைந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையிலும், நிவாரணம் கிடைக்காமல் பழங்குடியின மக்கள் தற்காலிக குடில்கள் அமைத்து வாழ்ந்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட ஓகி புயலால் மாவட்டமே உருக்குலைந்தது. குறிப்பாக பேச்சிப்பாறை அருகே மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் களப்பாறை, பிண்ணமுட்டு தேரி உள்ளிட்ட பழங்குடியின கிராமங்களில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தன.
ஏற்கனவே சாலை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வரும் அவர்கள், தற்போது வீடுகளையும் இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு நிவாரணமும் வழங்கப்படாததால், தற்காலிக குடில்களில் தங்கியுள்ளனர்.
எனவே, தங்களது குடியிருப்புகளை அரசு உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.