தற்போது நிலவும் பொருளாதார வீழ்ச்சி நிலைக்கு பணமதிப்பிழப்பின் தாக்கமே காரணம் என்று தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்து நாட்டின் தெவோஸ் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதைத் தெரிவித்தார். அமைப்புசாரா தொழில்களின் பொருளதாரம் பணமதிப்பிழப்பால் பாதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், அத்தகைய தொழில்கள் பல மூடப்பட்டுவிட்டதாகவும், ஏனெனில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அந்த நிறுவனங்களால் தப்பிப்பிழைக்க முடியவில்லை’ என்றும் குறிப்பிட்டார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஓரளவு அதிகப்படுத்தியது என்றும், ஆனால் அதன் அளவு மிகக்குறைவு என்றும் ரகுராம் குறிப்பிட்டார். ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட விதம் குறைபாடுகளை சிலர் தெரிவித்துவருவதாக குறிப்பிட்ட ரகுராம், சில பிரச்னைகளை சரிசெய்தால் ஜி.எஸ்.டி நீண்டகாலத்திற்கு பலனளிக்கும் என்றும் ரகுராம் ராஜன் குறிப்பிட்டுள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுப்பதைப்பற்றி குறிப்பிட்ட ரகுராம் ராஜன், தங்களிடம் அதுகுறித்து கருத்துகேட்கப்பட்ட போது தான் தெரிவித்ததாகவும் குறிப்பிட்ட ரகுராம் ஆனால் இந்த நடவடிக்கை மிகக்கடுமையானது என்றும் குறிப்பிட்டார். மேலும், நாம் கருத்துக்களை மட்டுமே சொல்லமுடியும் அமைப்பைத் தடுத்து நிறுத்த முடியாது என்றும் குறிப்பிட்டார்.