ஞாயிறு, 21 ஜனவரி, 2018

கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்! January 21, 2018

Image

கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. 

நாகப்பட்டிணம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் 10,000 ஏக்கர் பரப்பளவில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. 

இந்த சரணாலயத்திற்கு அக்டோபர் முதல் மார்ச் வரை லட்சக்கணக்கான பறவைகள் வந்து செல்கின்றனர். இந்த ஆண்டு ஆர்க்டிக் பிரதேசங்களில் கடுங்குளிர் நிலவுவதால் உணவு தேடி லட்சக்கணக்கான பறவைகள் கோடியக்கரை சரணாலயத்தில் குவிந்து வருகின்றன. 

இந்நிலையில் சரணாலயத்தில் உள்ள பறவைகளை கணக்கு எடுக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. இதில் வனத்துறையினர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என 12 குழுக்களாக பிரிந்து கணக்கு எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

வெளிநாட்டு பறவைகளின் வாழ்விடம், உணவு தேடிசெல்லும் இடம் ஆகிய பகுதிகளில் கணக்கு எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.