சனி, 27 ஜனவரி, 2018

முதல்வரோடு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட பெண்கள் யார் தெரியுமா? January 27, 2018

Image
முறையான மருத்துவம் மற்றும் தன்னம்பிக்கை இருந்தால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து 20 ஆண்டு ஆகியும் தன்னிறைவான வாழ்க்கையை வாழ முடியும் என்பதை விளக்கும் செய்தி தொகுப்பை காணலாம்.

கல்லீரல் நோய் குறித்தும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் சர்வதேச மருத்துவர்கள் பங்கேற்ற இரண்டு நாள் கருத்தரங்கள் நடைபெற்றது. இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளரான மருத்துவர் முகமது ரீலா 2 ஆண்டுகளுக்கு முன் லண்டன் கிங்ஸ் மருத்துவமனையில், பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து இருந்தார்.

20 ஆண்டுகள் கழித்து அந்த பெண்ணை கௌரவிக்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நினைவு பரிசு வழங்கினார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி வாழ்வதால் மற்றவர்களை போல் தானும் இயல்பாக வாழ்வதாக மகிழ்ச்சி தெரிவிக்கிறார் ஃபென்னா, ட்ரினிட்டி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயிலும் இவர் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை செய்தவர்களுக்கு முன்மாதிரியாக உள்ளார். 

20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அறுவை சிகிச்சை செய்வது மிகுந்த சவாலாக இருந்தது, ஆனால் தற்போது அதன் வழிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செல்கிறார் மருத்துவர் முகமது ரீலா, தமிழகத்தை சேர்ந்த இவர் உலக அளவில் உறுப்பு மாற்று சிகிச்சை செய்வதில் தலை சிறந்தவராக உள்ளார். 

உறுப்பு மாற்று சிகிச்சை பின்னும் தன்னம்பிக்கையுடன் வாழும் ஃபென்னா போன்றவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை செய்தவர்களின் நம்பிக்கை நட்சத்திரம் ஆக உள்ளார்.