செவ்வாய், 9 ஜனவரி, 2018

தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை January 8, 2018

தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால். அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், கடற்கரையோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 மைல் வேகத்தில் காற்று வீசுக்கூடும் என்றும் தென் தமிழகத்தில் இயல்பை விட 1 லிருந்து 2 செல்சியஸ் வெப்பநிலை குறைந்து காணப்படும் என்றும் கூறினார். வட தமிழகத்தில் 3 செல்சியஸ் வரை வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளதாகவும், மேகமூட்டம் காணப்படும் என்றும் தெரிவித்தார். 
Image