வியாழன், 28 பிப்ரவரி, 2019

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவு

2019-02-28@ 13:11:44 நிகோபார்: அந்தமானின் நிகோபார் தீவுகளில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 5.30 மணிக்கு நிகோபர் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியிருந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணாமாக பல வீடுகளில் அதிர்வுகள் உணரப்பட்டன. இந்த நிலநடுக்கத்தின் ஆழம் சுமார் 94 கி.மீ தொலைவில்...

பள்ளிவாசலுக்கென வசூல் செய்துவிட்டு பள்ளிவாசல் இடத்தின் ஒரு பகுதியில் அலுவலகம் அமைப்பது சரியா?

பள்ளிவாசலுக்கென வசூல் செய்துவிட்டு பள்ளிவாசல் இடத்தின் ஒரு பகுதியில் அலுவலகம் அமைப்பது சரியா? கேள்வி பதில் நிகழ்ச்சி - 27.02.2019 பதிலளிப்பவர் : எம்.எஸ்.சுலைமான் (மேலாண்மை குழு தலைவர், TN...

புதன், 27 பிப்ரவரி, 2019

கமலின் கூட்டணி அழைப்பை நிராகரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி! February 27, 2019

கமலின் கூட்டணி அழைப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிராகரித்துள்ளது.  நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்கள் நீதிமய்ய தலைவர்  கமல்ஹாசன் டெல்லியில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைமையிலான கூட்டணியில் இணைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு...

இந்தியாவின் பெரும் பகுதிகளில் வறட்சி ஏற்பட உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை! February 27, 2019

நிலத்தடி நீரின் வீழ்ச்சி அதிகரித்து கொண்டிருப்பதால் இந்தியாவின் பெரும் பகுதிகளில் வறட்சி ஏற்பட உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்தியாவில் கணக்கிட்ட அளவை விட 70% வேகமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதாக தெரிய வந்துள்ளது.  ``டெல்லி, ஹரியானா, மேற்கு உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய இடங்களில்...

உலகின் ஆரோக்கியமான நாடுகளின் பட்டியலில் 120வது இடத்தில் இந்தியா! February 26, 2019

உலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் ஸ்பெயின் முதலிடத்திலும்,  இந்தியா 120வது இடத்திலும் உள்ளது. உலகின் ஆரோக்கியம் மிகுந்த நாடுகள் பட்டியலை “BLOOMBERG“ நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஒரு நாட்டின் ஒட்டுமொத்த சுகாதாரத்தை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  இதில் ஸ்பெயின் முதலிடமும், இத்தாலி 2வது இடத்தையும் பிடித்துள்ளன. ஐஸ்லாந்து,...

புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசு மீது மமதா பானர்ஜி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! February 26, 2019

Authors புல்வாமா தாக்குதல் தொடர்பாக முன்னதாகவே உளவுத்துறை எச்சரித்திருந்தும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன் என மத்திய அரசுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். கொல்கத்தாவில் நேற்று (பிப்.25) நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய மமதா பானர்ஜி, புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள்...

ராணுவ கண்காணிப்பை மீறி பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது எப்படி? February 27, 2019

Authors பாகிஸ்தான் ராடார் அமைப்புக்கே தெரியாமல் அந்நாட்டு எல்லைக்குள் இந்திய விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது, பாகிஸ்தான் விமானப்படையின் திறனை கேள்விக்குள்ளாகி உள்ளது. உண்மையில் இந்தியாவின் பலம் என்ன? பாகிஸ்தானின் பலவீனம் என்ன? ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட சூடு மறைவதற்குள், பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட...

திங்கள், 25 பிப்ரவரி, 2019

பாமக குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் விமர்சனம்! February 25, 2019

சமூகநீதி பேசுகின்ற பாட்டாளி மக்கள் கட்சி கொள்கைகளை மறந்து, மதவாத பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம் செய்துள்ளார். தஞ்சையில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், பாஜக தலைமையிலான கூட்டணி என்பது தேசத்தையே விற்கக்கூடிய கூட்டணி எனவும், அந்த கூட்டணி தேர்தலில் வெற்றி பெறக்கூடாது...

புல்வாமா தாக்குதல் குறித்து உரிய ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கத் தயார்: பாகிஸ்தான் February 25, 2019

புல்வாமா தாக்குதல் குறித்து உரிய ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கத் தயார் என பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதனால் பாகிஸ்தானில் இருந்துகொண்டு இந்த தாக்குதலை நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு மற்றும் அதன்...

வடநாட்டுக்கு ஒரு சட்டம், தமிழகத்துக்கு ஒரு சட்டமா? - அற்புதம்மாள் ஆவேசம்! February 25, 2019

வடநாட்டு நடிகருக்கு ஒரு சட்டம், பேரறிவாளனுக்கு ஒரு சட்டமா என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.  கடலூரில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மும்பை தாக்குதலில் தொடர்புடைய சஞ்சய் தத் நடிகர் என்பதால், 5 ஆண்டுகளில் அவர் விடுதலை செய்யப்பட்டதாகவும்,...

வெனிசுலாவில் உச்சத்தை அடைந்துள்ள மக்கள் போராட்டம்! February 25, 2019

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் மக்கள் போராட்டம் உச்சத்தை அடைந்துள்ளது. நிவாரணப் பொருட்களுக்கு கூட அந்நாட்டு அதிபர் தடை விதித்ததால் மக்கள் அடிப்படை உதவிகளுக்கு அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது.  மத்திய கிழக்கில் எண்ணெய் வளமிக்க நாடுகளை சுழன்றடித்த போராட்டம் இப்போது தென்னமெரிக்க நாடுகளில் வீசிக்கொண்டிருக்கிறது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலா உலகின்...

வரலாற்றில் முதன்முறையாக பெண் தூதுவரை நியமித்தது சவுதி அரேபியா! February 25, 2019

சவுதி இளவரசி ரீமா பிந்த்பாண்டர் அல்சவுத் (Reema bint Bandar al-Saud) அமெரிக்கா தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் இதன் மூலம் வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவரை சவுதி அரேபியா தூதராக நியமித்துள்ளது.  சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், "சவுதி அரேபியா விஷன்-2030" என்ற பெயரில் தொலை நோக்கு திட்டத்தை முன்னெடுத்து வருகிறார். பெண்களுக்கு இதுவரை அளிக்கப்படாத...

உலகிலேயே, இந்தியாவில் தான் அதிகமாக போலி செய்திகள் பரப்பப்படுகின்றன...அதிர்ச்சி ரிப்போர்ட்! February 24, 2019

source ns7.tv உலகிலேயே, இந்தியாவில்தான் அதிக அளவு போலி செய்திகள் பரப்பப்படுவதாக சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில், வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகமடைந்துவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைத்து வயதினரும் இதற்கு அடிமையாகிவிட்டதால்,...

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

மார்ச் 1 முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ளவிருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு! February 24, 2019

டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி மார்ச் 1 முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை என குற்றம்சாட்டினார். நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஜனநாயகம், டெல்லிக்கு...

வங்கிகளில் பிடிக்கப்பட்ட அபராத தொகை காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் திருப்பி அளிக்கப்படும் : ப.சிதம்பரம் February 24, 2019

வங்கிக் கணக்கில் குறைந்தபட்ட இருப்புத் தொகை இல்லாத காரணத்திற்காக பிடிக்கப்பட்ட அபராத தொகை, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், திருப்பி அளிக்கப்படும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். திருப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர்...

ஆட்சியை காப்பாற்றவே பாஜகவுடன் கூட்டணி : அன்வர் ராஜா அதிமுக எம்.பி February 24, 2019

தமிழகத்தில் ஆட்சியை  காப்பாற்றுவதற்காகவே பாஜகவுடன்  கூட்டணி வைத்துள்ளதாக அதிமுக எம்பி அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். பரமக்குடியில் நடைபெற்ற முத்தலாக் மசோதா உரிமை மீறும் செயல் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், அதிமுக சார்பில் 37 எம்பிக்கள் இருந்தும் எந்த ஒரு பயனும் இல்லை என்றும், 5 ஆண்டு காலமாக நாடாளுமன்றத்தில் கத்தி கத்தி குரல் எழுப்பியும் எந்த பலனும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். தேர்தல்கால கூட்டணி கணக்கு என்பது...

சேலம் அருகே பயங்கர காட்டுத் தீவிபத்து: நேரில் பார்வையிட்டார் ஆட்சியர் ரோகினி! February 24, 2019

சேலம் அருகே மலைப்பாதையில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் ஆயிரக்கணக்கான மரங்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. வனப்பகுதியில் சிக்கிய 30 குடும்பத்தினரை, வனத்துறையினர் மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர். சேலம் மாவட்டம் கிழக்கு மலைத் தொடர்ச்சியான ஏற்காடு சேர்வராயன் மலை வனப்பகுதிகளில் வெயில் அதிகரித்ததால் வறட்சி நிலை காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று பிற்பகல் ஏற்காடு...

மனித உரிமைகள் (Human Rights)

மனித உரிமைகள் (Human Rights) மனித மாண்பு எங்கெல்லாம் மீறப்படுகிறதோ அல்லது மறுக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் அவர்களின் மாண்பை காக்கும் உரிமையே மனித உரிமைகளாகும். இது எந்நாட்டவருக்கும், உலகெங்கும் பொருந்தக் கூடியதாகும். மனித உரிமைகள் மீறல் என்றால் ? ஒவ்வொரு மனிதனுடைய மனித உரிமைகளையும் காப்பதற்குரிய செயல்படுத்த கட்டுப்பாடும் அரசுக்கு உண்டு. அதனை செயல்படுத்த இயலாத நிலையில்...

மதவாத அரசியலுக்கு முடிவுகட்டுவோம்!

மதவாத அரசியலுக்கு முடிவுகட்டுவோம்!! உரை : இ. முஹம்மது(மாநிலப் பொதுச்செயலாளர்,TNTJ) மாநில தலைமையக ஜுமுஆ இரண்டாம் உரை - (22-02-2019)...

சனி, 23 பிப்ரவரி, 2019

பாகிஸ்தானிற்கு வழங்க இருந்த ரூ. 9,000 கோடி நிதி உதவியை நிறுத்திய அமெரிக்கா! February 23, 2019

புல்வாமா தாக்குதல் எதிரொலியாக, பாகிஸ்தானுக்கு வழங்குவதாக அறிவித்த 9,000 கோடி ரூபாய் நிதியை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.  காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதல் குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிடம்  செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் கவலை அளிப்பதாகவும், அது மிகப்பெரிய ஆபத்தானது...

பாகிஸ்தானுக்கு நீராதாரமாக விளங்கும் 3 நதிகளை தடுக்க மத்திய அரசு திட்டம்! February 22, 2019

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிநீரை தடுத்து நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.  ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது....

வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

திருநெல்வேலி மாவட்டத்தில் 27 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் உத்தரவு

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=475599 நெல்லை : திருநெல்வேலி மாவட்டத்தில் 27 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மக்களவை தேர்தலை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிராபகர் நடவடிக்கை எடுத்துள்ளார். பணியிட மாற்றம் தொடர்பான மேல்முறையீடுகளோ, விடுப்பு விண்ணப்பங்களோ ஏற்கப்படாது என்று அவர் தெரிவித்துள்ளார். ...

தமிழகத்தில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து 3,168 வழிபாட்டு தலங்கள் கட்டப்பட்டுள்ளன : உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை!

சென்னை : தமிழகத்தில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து 3,168 வழிபாட்டு தலங்கள் கட்டப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை சமர்பித்துள்ளது. அரசு நிலங்கள், பொது சாலைகளை ஆக்கிரமித்து வழிபாட்டுத் தலங்களை கட்டக்கூடாது என்ற அரசாணையை பின்பற்ற கோரிய வழக்கில், 3003 கோயில்கள், 131 தேவாலயங்கள், 27 MASJID-கள்  அரசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாக தமிழக அரசு...

வியாழன், 21 பிப்ரவரி, 2019

காஷ்மீரில் 18 பிரிவினைவாத தலைவர்கள், 155 அரசியல் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ்

ஸ்ரீநகர் : காஷ்மீரில் 18 பிரிவினைவாத தலைவர்கள் மற்றும் 155 அரசியல் தலைவர்களின் பாதுகாப்பை மாநில அரசு நிர்வாகம் திரும்பப் பெற்றுள்ளது.புல்வாமா தாக்குதலில்  44 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம்ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபுரா பகுதியில் கடந்த 14ம் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து தற்கொலைப்படை பயங்கரவாதி கார்குண்டு...

அதிமுக, பாஜக, பாமக கூட்டணி குறித்து தவ்ஹீத் ஜமாஅத் கருத்து என்ன?

அதிமுக, பாஜக, பாமக கூட்டணி குறித்து தவ்ஹீத் ஜமாஅத் கருத்து என்ன? கேள்வி பதில் நிகழ்ச்சி - 20.02.2019 பதிலளிப்பவர் : ஆர்.அப்துல் கரீம் (மாநில செயலாளர், TNTJ...

புதன், 20 பிப்ரவரி, 2019

19/02/2019, களத்தில் இருந்து நேரடியான நமது தமிழக இரானுவ வீரனின் உண்மை வாக்குமூலம்,

Source: FB Jeddah TNTJ காஷ்மீர் வெடிகுண்டு சம்பவம்? 19/02/2019, களத்தில் இருந்து நேரடியான நமது தமிழக இரானுவ வீரனின் உண்மை வாக்குமூலம், உள்ளம் பதறவைக்கிறது! யார் அந்த துரோகி....? ...

ராணுவத்தில் சேருவதற்கு 2500 இளைஞர்கள் விண்ணப்பம்..! February 20, 2019

 ராணுவத்தில் சேருவதற்கு இரண்டாயிரத்து 500 இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். பாரமுல்லா பகுதியில் 111 பணியிடங்களுக்கு இரண்டாயிரத்து 500 இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். வழக்கத்திற்கு மாறாக ராணுவத்தில் சேர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதற்கு, அப்பகுதியில் நிலவும் வேலை வாய்ப்பின்மையும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. ஆகையால் எந்த வேலை கிடைத்தாலும் தற்போதைய சூழலில்...

கேரளா காவல்துறையில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள KP-BOT ரோபோ..! February 20, 2019

இந்தியாவிலேயே முதல் முறையாக கேரளா காவல்துறையில் ரோபோ ஒன்று பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளது.  இதனை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். திருவணந்தபுரத்தில் உள்ள கேரளா காவல்துறை தலைமை அலுவலகத்தில் KP-BOT எனப்படும் ரோபோ பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளது.  இந்த ரோபோ காவல் தலைமையகத்திற்கு வருவோருக்கு வழிகாட்டி அதிகாரிகளுடன் நேரம் நிர்ணயிக்க உதவி செய்கிறது....

தெலங்கானாவில் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு 6 பேர் உயிரிழப்பு..! February 20, 2019

தெலங்கானா மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு 6 பேர் உயிரிழந்தது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானாவில் கடந்தாண்டு பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் 28 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்தாண்டு நடத்தப்பட்ட ஆய்வில், 496 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரண்டாயிரத்து 437 நபர்களிடம்...

அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! February 19, 2019

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு மத்திய அரபிக்கடல் முதல் கர்நாடக கடற்பகுதிகள் வரை வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது, இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும், ஓர்...