வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

வட மாநிலங்களில் பனிப்பொழிவு தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்! February 08, 2019

Image
டெல்லி, ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பனிப்பொழிவு தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
தலைநகர் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடர்ந்து பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக, காலை 11 மணி வரையில் மூடுபனி நிலவுவதால், போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரவு நேரங்களில் 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுவதால், உறைபனி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. வரலாறு காணாத, இந்த பனிப்பொழிவு காரணமாக, நேற்றிரவு ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நேற்று பல்வேறு ரயில் மற்றும் விமானங்கள் புறப்படும் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டன. இதனிடையே, இந்த பனிப்பொழிவு அடுத்த 24 மணி நேரத்திற்கு நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source: ns7.tv