தமிழக மக்களை ஏமாற்றும் பட்ஜெட், தமிழக அரசின் இந்த பட்ஜெட் என காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் ராமசாமி விமர்சித்துள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்தவித நன்மையும் இல்லாத பட்ஜெட்டை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளதாக கூறினார்.
தமிழக பட்ஜெட்டில் பட்டியலின மக்கள், மற்றும் பெண்களுக்கான புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வழக்கம் போல இந்த பட்ஜெட்டும் நிதி பற்றாக்குறை பட்ஜெட் என விமர்சித்தார். தேர்தல் அறிவிப்புகளை கருத்தில் கொண்டே சில அறிவுப்புகள் வெளியாகியுள்ளதாகவும் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
துணை முதலமைச்சர் படித்த பட்ஜெட் அறிக்கை, வெற்றுக் காகிதமாக உள்ளதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளின் கடன் குறித்து எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றார். தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டால், தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று குற்றம்சாட்டினார்,
source: ns7.tv