கர்நாடகா செல்லும் கோதண்டராமர் சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து டிக்டாக்கில் வீடியோ வெளியிட்ட 7 பேரை கிருஷ்ணகிரி போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட கோதண்டராமர் சிலை திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து கர்நாடகாவுக்கு லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்த சிலை செல்லும் வழி எல்லாம், சாலையோரம் உள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதனிடையே இந்த சிலை தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதிக்கு சென்று சேர்ந்துள்ளது. இந்நிலையில் சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் டிக்டாக் செயலியில் கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே இந்த சிலை தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதிக்கு சென்று சேர்ந்துள்ளது. இந்நிலையில் சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் டிக்டாக் செயலியில் கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இதையடுத்து கலவரத்தை தூண்டும் விதமாக வீடியோக்களை வெளியிட்டதாக கூறி சூளகிரியை சேர்ந்த மகேஷ்குமார், சத்தியமூர்த்தி, சந்தோஷ்குமார் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
source: ns7.tv