Authors
பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மொபைலில் நாம் பேசும் வாய்ஸ் அழைப்புகளை ரெக்கார்ட் செய்வது இன்று அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இதனை செய்ய பல வழிகளும் உள்ளன. அதே நேரத்தில் வாட்ஸ் அப்பில் பேசும் அழைப்புகளை ரெக்கார்ட் செய்வது என்பது சற்று சிரமமான விஷயமாகவே இருந்து வருகிறது. ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களில் வாட்ஸ் அப் கால்களை எப்படி ரெக்கார்ட் செய்வது என்பது குறித்து தற்போது அறிந்து கொள்வோம்..
கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றி ஐபோன்களில் எவ்வாறு வாட்ஸ் அப் கால்களை ரெக்கார்ட் செய்வது என தெரிந்துகொள்வோம்.
1. உங்களுடைய ஐபோனை லைட்னிங் கேபிளை பயன்படுத்தி மேக் கணினியுடன் இணைத்து கொள்ளுங்கள்.
2. முதல்முறையாக இந்த இணைப்பை ஏற்படுத்தினால் திரையில் தோன்றும் "Trust this computer’ என்பதனை செலக்ட் செய்யவும்.
3. கணினியில் உள்ள QuickTime-ஐ திறக்கவும்
4. அதற்குள் File என்பதை தேர்ந்தெடுத்து, New Audio Recording என்பதை தேர்ந்தெடுக்கவும்.
5. QuickTime-ல் உள்ள Record பட்டனை அழுத்தி அதன் மூலம் காட்டப்படும் ஐபோன் என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
6. தற்போது மீண்டும் ஒரு முறை QuickTime-ல் உள்ள Record பட்டனை அழுத்தவேண்டும்.
7. இப்போது ஐபோனில் உள்ள வாட்ஸ் அப் செயலியின் மூலம் வாட்ஸ் அப் கால் மேற்கொள்ளவும்.
8. கால் கனெக்ட் ஆன பின்னர் Add user icon என்பதனை தேர்ந்தெடுத்து, யாருடன் பேச வேண்டுமோ அந்த நபரை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். தற்போது அந்த நபருடனான அழைப்பு இணைக்கப்பட்டிருக்கும்
9. பேசி முடித்தவுடன் அழைப்பை Disconnect செய்துவிடவும்
10. தற்போது QuickTime-ல் ரெக்கார்டிங்கை நிறுத்திவிட்டு இதனை கணிப்பொறியில் சேமித்துக் கொள்ளவும்.

ஆண்ட்ராய்ட் மொபைலில் வாட்ஸ் அப் கால் ரெக்கார்ட்?
Cube Call Recorder பயன்படுத்தி வாட்ஸ் அப் கால்களை ரெக்கார்ட் செய்யும் முறை குறித்து தற்போது பார்ப்போம்.
(குறிப்பிட்ட மொபைல் மாடல்கள் மட்டுமே இந்த வசதியினை சப்போர்ட் செய்யும் என்பதை கவனிக்கவும்)
1. Cube Call Recorder செயலியை இன்ஸ்டால் செய்யவும்
2. Cube Call Recorder-ஐ open செய்து அதில் வாட்ஸ் அப் என்பதை தேர்ந்தெடுக்கவும்
3. யாருடன் பேசுவதை பதிவு செய்ய வேண்டுமோ அந்த நபருக்கு அழைக்கவும்
4. அப்போது Cube Call widget திரையில் தோன்றினால் இது வேலை செய்கிறது என பொருள்
5. இந்த செயலி செயல்படாமல் இருந்தால் Cube Call Recorder-ன் செட்டிங்கில் சென்று Force VoIP call as voice call என்பதனை செலக்ட் செய்துவிடவவும்
6. Cube Call widget திரையில் தோன்றுவதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்

இதே போல SCR Screen Recorder என்ற செயலியை பயன்படுத்தியும் கால் ரெக்கார்ட் செய்யலாம், எனினும் இதற்கு மொபைலை Root செய்ய வேண்டியிருக்கும்.
நீங்கள் வசிக்கும் நாட்டில் தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்வது சட்டவிரோதமானதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் வாட்ஸ் அப்பில் யாருடைய கால்களை ரெக்கார்ட் செய்ய இருக்கிறோமோ அவர்களிடம் அனுமதி வாங்கி இதனை மேற்கொள்ள வேண்டும். இந்த முறையில் வீடியோ கால்களை ரெக்கார்ட் செய்ய இயலாது, வாய்ஸ் கால்களை மட்டுமே ரெக்கார்ட் செய்ய முடியும் என்பது கவனிக்கத்தக்கது.
source ns7.tv