சனி, 2 பிப்ரவரி, 2019

பாஜக பிரமுகர் கல்யாணராமன், சென்னை விமான நிலையத்தில் கைது! February 02, 2019

Image
இஸ்லாமியர்களை பற்றி முகநூலில் அவதூறாக செய்தி பதிவிட்டதாக முன்னாள் பாஜக பிரமுகர் கல்யாணராமனை சென்னை விமானநிலையத்தில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். 
சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த முன்னாள் பாஜக பிரமுகரும், வலதுசாரி ஆதரவாளருமான கல்யாணராமன், காக்கை சித்தர் கல்யாணராமன் என்ற பெயரில் முகலூலில் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகிறார். இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வந்ததாக அவர் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு பல புகார்கள் வந்தன. 
அதன் அடிப்படையில் கல்யாணராமன் மீது மூன்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் அகமதாபத்தில் இருந்து சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். 

source ns7.tv
http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/2/2/2019/kalyanaraman-was-arrested-chennai-airport