ஞாயிறு, 8 மார்ச், 2020

உலகளாவிய சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் சென்னை அண்ணா பல்கலை., முன்னேற்றம்!

Image
உலகளாவிய சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஆண்டை விட 24 இடங்கள் முன்னேறி 373-வது இடத்தைப் பிடித்துள்ளது.
உலகளவில் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிடுவதில் குவாக்குவாரெலி சைமண்ட்ஸ் என்ற நிறுவனம் சிறந்ததாக கருதப்படுகிறது. இந்நிறுவனம் 2020ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை  வெளியிட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஆண்டை விட 24 இடங்கள் முன்னேறி 373வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
கல்வி சார்ந்த நற்பெயர், தொழில் நிறுவனங்கள் மத்தியில் உள்ள நற்பெயர் மற்றும் ஆராய்ச்சி வெளியீடு தொடர்பான குறியீடுகளில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகம் முன்னேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை ஐஐடியும் 7 இடங்கள் முன்னேறி, 88வது இடத்தை பிடித்துள்ளது. இப்பட்டியலில் இந்திய அளவில் மும்பை ஐஐடி, டெல்லி ஐஐடி, காரக்பூர் ஐஐடி ஆகியவை முதல் மூன்று இடங்களை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
credit ns7.tv