இந்தியாவில் முதன்முதலில் கொரோனா நோய் கேரளாவில் தான் கண்டறியப்பட்டது. 373 நபர்கள் இந்நோய்க்கு அங்கு ஆளாகியுள்ளனர். ஆனால் தொடர்ந்து கேரள மாநிலம் எடுத்து வரும் சீறிய நடவடிக்கைகளால் தற்போது குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த 10ம் தேதியன்று 7 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட, 27 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 11ம் தேதி 10 பேருக்கு நோய் தொற்று உறுதியாக, 19 பேர் குணம் அடைந்தனர். ஏப்ரல் 12ம் தேதி கேராளாவில் பதிவான கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2 மட்டுமே.
ஆனால் 36 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்நோய்க்கு இதுவரையில் 3 மட்டும் உயிரிழக்க 179 பேர் பூரண குணம் அடைந்துள்ளனர். தற்போது அங்கு இருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணைக்கை 194. கடந்த கால தொற்றுநோய் படிப்பினைகள், மக்களின் ஒத்துழைப்பு, அரசின் சீரிய முயற்சி, கொரோனாவுக்கு எதிரான இந்த போரில் கேரளாவிற்கு வெற்றியை ஈட்டித்தந்துள்ளது.
வெளிநாட்டில் இருக்கும் மலையாள மக்கள், டூரிஸ்ட் விசா மற்றும் நண்பர்களை, குடும்ப உறுப்பினர்களை பார்க்க சென்றவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. வீடு திரும்ப ஆசைப்படுகின்றவர்களை உடனே அழைத்துவர சிறப்பு விமானம் தேவை என்றும் பினராயி விஜயன் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.