திங்கள், 13 ஏப்ரல், 2020

கொரோனாவை எதிர்த்து போராட பிளாஸ்மா தெரபி உதவும்: எய்ம்ஸ் இயக்குநர்!

Image
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவரின் ரத்த பிளாஸ்மா மூலம், கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முடியும் என எய்ம்ஸ் இயக்குநர் கூறியுள்ளார்.
கோவிட்- 19 நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க வேண்டும் என்பது தான் மருத்துவர்கள் பலரின் கருத்தாக உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவரின் ரத்தம், கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படும் என டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார். 
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவரின் ரத்தப் பிளாஸ்மாவில், அந்த நோயை குணமாக்கும் எதிர்ப்பாற்றல் இருக்கும். அதனை பயன்படுத்தி நோயால் பாதிக்கப்பட்டுள்ளவரின் உடலில் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கலாம் என அவர் கூறியுள்ளார். அதனால் தான் கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்கள் ரத்த தானம் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கேட்டுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 
இந்த ரத்தப் பிளாஸ்மாவை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு செலுத்தினால் அவரது உடலில் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும். எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் பிளாஸ்மா தெரபி பயன்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
credit ns7.tv