திங்கள், 6 ஏப்ரல், 2020

189 ஆண்டு பழமையான பிரிட்டிஷ் கால பாலம் வெடி வைத்து தகர்ப்பு!

புனே - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையின் நடுவே கடந்து செல்லும் 189 ஆண்டு பழமையான பிரிட்டிஷ் கால பாலம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.
மும்பை - புனே நகரங்களை இணைக்கும் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையின் குறுக்கே அம்ருதாஞ்சன் பாலம் இருந்தது. பிரிட்டிஷ் காலத்தில் 1830ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த பாலத்தின் கீழாக செல்லும் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைக்கு இந்த பாலம் இடையூராக இருந்துவந்தது.
பல ஆண்டுகளாகவே இந்த பாலத்தில் போக்குவரத்து நடைபெறாத நிலையில் எக்ஸ்பிரஸ் சாலையின் நடுவே குறுக்கிடும் அதன் பில்லர்கள் போக்குவரத்துக்கு இடையூராக இருந்து வந்தது. முக்கிய நெடுஞ்சாலையான புனே - மும்பை மார்க்கத்தில் போக்குவரத்தை 10 நாட்களுக்கு திருப்பினால் மட்டுமே இந்த பாலத்தை தகர்க்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது.
Maharashtra: 189-year-old British-era Amrutanjan Bridge, near Lonavala, at Pune-Mumbai Expressway was demolished today through controlled explosion, to make traffic movement between Mumbai and Pune smoother.
இதைப் பற்றி 506 பேர் பேசுகிறார்கள்
இந்நிலையில் தற்போது 21 நாட்கள் ஊரடங்கை பயன்படுத்தி இந்த பாலத்தை மகாராஷ்டிர சாலை போக்குவரத்து துறையினர் இடிக்க முடிவெடுத்தனர். அதன்படி வெடிவைத்து இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாலம் இடிக்கப்பட்டுள்ளது. 

இந்த நவம்பர் மாதத்துடன் 190 ஆண்டுகளை நிறைவு செய்ய இருந்த நிலையில் இந்த பாலம் இடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
credit ns7.tv