, இந்திய அரசின் அமைச்சகங்கள்/துறைகள், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றுக்காக ஊரடங்கு-2 நடவடிக்கைகளுக்கான திருத்தப்பட்ட ஒருங்கிணைந்த வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளில், பொது மக்களின் இன்னல்களை கருத்தில் கொண்டு சுகாதாரம், நிதி, ஊரக வளர்ச்சிப் பணிகள், பொது பயன்பாடுகள், மின் வணிகம் மறறும் சரக்கு போன்ற சேவைகளுக்கு பொது முடக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விலக்கு வரும் ஏப்ரல் 20க்குப் பிறகு, நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்டவை
வேளாண்மை துறை:
குறைந்தபட்ச ஆதரவு விலை செயல்பாடு உள்ளிட்ட, வேளாண் பொருள்களைக்
கொள்முதல் செய்வதில் ஈடுபட்டுள்ள முகமைகள்.
கொள்முதல் செய்வதில் ஈடுபட்டுள்ள முகமைகள்.
பண்ணை எந்திரங்கள் தொடர்பான ‘வாடிக்கை வாடகை மையங்கள்’
உரங்கள், பூச்சிக்கொல்லிகள், விதைகள் உற்பத்தி மற்றும் சிப்பமிடும்
தொழில் பிரிவுகள்.
உரங்கள், பூச்சிக்கொல்லிகள், விதைகள் உற்பத்தி மற்றும் சிப்பமிடும்
தொழில் பிரிவுகள்.
வேளாண் விளைபொருள் விற்பனைக் குழு செயல்படுத்தும் அல்லது மாநில அரசுகள் அறிவிக்கைகளின்படி செயல்படும் கொள்முதல் நிலையங்கள்.
வேளாண் எந்திரக்கடைகள், அவற்றின் உதிரி பாகங்கள் (அவற்றின் விநியோகம் உள்ளிட்டவை), பழுது நீக்குதல், நெடுஞ்சாலைகளில் உள்ள லாரி பழுது நீக்கும் கடைகள் (எரிபொருள் விற்பனை நிலையங்களில் உள்ளவற்றுக்கு முன்னுரிமை), ஆகியவை வேளாண் உற்பத்திப் பொருள்களை எடுத்துச் செல்லும் வகையில் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, 50 சதவீத தொழிலாளர்களுடன் கூடிய தோட்டங்களைக் கொண்ட தேயிலைத் தொழிலும் இயங்கலாம்
மீன்பிடி தொழில், மீன் வளர்ப்புத் தொழில் நடவடிக்கைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மீன் பொருட்களின் இயக்கமும் தற்போது அனுமதிக்கப்படுகிறது.
பால் மற்றும் பால் பொருட்களின் சேகரிப்பு, பதப்படுத்துதல், விநியோகம் மற்றும் விற்பனை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
கால்நடை வளர்ப்பு பண்ணை தொடர்பான செயல்பாடுகள் இயங்கலாம்.
நிதித்துறை:
நிதித்துறையின் முக்கிய கூறுகளாக செயல்படும்; ரிசர்வ் வங்கி, அனைத்து அட்டவணை வங்கிகள் , ஏடிஎம் சாதனங்கள், மூலதனம் மற்றும் கடன் சந்தைகளும் செயல்படும் (செபி மற்றும் காப்பீட்டு நிறுவனங்களால் அறிவிக்கப்பட்ட )
ஐஆர்டிஐ மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள்