தமிழகத்தில் கொரோனாே பாதிப்பில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இரண்டாவது இடத்தில் கோவை உள்ளது. முதல் 10 இடங்களில் இருந்த மதுரை தற்போது 11வது இடத்தில் உள்ளது
ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கொரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஏப்ரல் 14) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,204 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று?- பட்டியல் இதோ,
தமிழகத்தில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை நீடித்து வருகிறது. சென்னையில் 210 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, கோவையில் 126 பேரும், திருப்பூரில் 79 பேரும், ஈரோட்டில் 64 பேரும், திண்டுக்கல்லில் 65 பேரும், நெல்லையில் 56 பேரும், நாமக்கல்லில் 46 பேரும், செங்கல்பட்டில் 45 பேரும், திருச்சியில் 43 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.