credit ns7.tv
இந்தியாவில் 400 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். சீனாவில் ஜனவரி 7ம் தேதி கொரோனா வைரஸ் பரவிய தகவலை அறிந்து, அதற்கடுத்த நாளான 8ம் தேதியே இந்தியாவில் இந்நோய் தடுப்பு பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டதாக தெரிவித்தார்.
நாடுமுழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், இந்தியாவில் சுமார் 400 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரிவித்த மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், அடுத்த 2-முதல் 3 வாரங்கள் மிக முக்கியமானது என மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.