உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 20 லட்சத்து 82 ஆயிரத்தை கடந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகளை குலைநடுங்க வைத்துள்ள கொரோனா வைரசால், நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 34 ஆயிரத்தை கடந்துள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டும், 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் 21 ஆயிரத்திற்கு அதிகமானோரும், ஸ்பெயின்ல் 18 ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளனர். மேலும், உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 லட்சத்தை நெருங்கியுள்ளது.
இதனிடையே, ஆறுதல் தரும் விஷயமாக, கொரோனா பாதிப்பில் இருந்து, உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 9 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,380 ஆகவும் பலி எண்ணிக்கை 414 ஆகவும் அதிகரித்துள்ளது.
credit ns7.tv