நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதோடு போக்குவரத்து சேவைகளும் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடையவுள்ளது. ஆனால் நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநில அரசுகள் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்திருந்தன.
இந்நிலையில் இது குறித்து இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறப்பாக செயல்படுவதாகவும் இந்தியாவின் நடவடிக்கைகளை உலக நாடுகள் பாராட்டி வருவதாகவும் தெரிவித்தார்.
தற்போதைய சூழலில், ஊரடங்கு நீட்டிப்பும், கட்டுப்பாடுகளும் அவசியமாவதாகவும் எனவே நாடுமுழுவதும் மே மாதம் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக தெரிவித்தார்.
1. வீட்டில் உள்ள முதியவர்களுக்கு கூடுதல் கவனிப்பு தேவை
2. சமூக இடைவெளியை பின்பற்றுவதோடு முகக்கவசங்களையும் அணிந்துகொள்ளுங்கள்
3. நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்
4. ஆரோக்கிய சேது" மொபைல் செயலியை மக்கள் பயன்படுத்த வேண்டும்
5. ஏழை, எளிய, ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்
6. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும்,
3. நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்
4. ஆரோக்கிய சேது" மொபைல் செயலியை மக்கள் பயன்படுத்த வேண்டும்
5. ஏழை, எளிய, ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்
6. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும்,
7. ஊழியர்கள் யாரையும் பணியில் இருந்து நிறுவனங்கள் நீக்க வேண்டாம் உள்ளிட்ட வேண்டுகோள்களை அவர் விடுத்துள்ளார்.
credit ns7.tv