ஊரடங்கை நீட்டித்து பிரதமர் மோடி அறிவித்ததற்கு, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், ஊரடங்கை நீட்டிப்பதற்கான கட்டாயத்தை புரிந்துகொள்ள முடிகிறது என தெரிவித்துள்ளார். எனினும், ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்கு அரசு முக்கியத்துவம் கொடுக்கவில்லை எனவும், 40 நாட்களுக்கு உணவு உள்ளிட்ட தேவைகளை தாங்களே பூர்த்தி செய்துகொள்ளும் நிலைக்கு ஏழைகள் விடப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
போதிய நிதியும், உணவும் இருந்தும், அரசு அதை விடுவிக்க மறுப்பதாகவும், நாட்டுக்காக, தான் கண்ணீர் சிந்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிதி கேட்ட தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு, மத்திய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும் ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
credit ns7.tv