வெள்ளி, 10 ஏப்ரல், 2020

கணக்கு படிக்கவேண்டியது நீங்கள்தான் - மதுவந்திக்கு நெட்டிசன்கள் கோரிக்கை

கொரோனா வைரஸ் பீதி உலகையை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் அபிமானிகள் சிலர் வெளியிடும் வீடியோக்கள், நெட்டிசன்கள் மட்டுமல்லாது பொது மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு வரும் 14ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. மீண்டும் அது நீட்டிக்கப்படலாம் என்று தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. மத்திய அரசும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கைதட்டவும், கடந்த 5ம் தேதி, இரவு 9 மணியிலிருந்து 9 நிமிடங்களுக்கு வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றவும் நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
விளக்கு ஏற்றுவதன் பின்னணியில் எவ்வித அரசியல், அறிவியல் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியிருந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் அபிமானிகள் சிலர் அவர்களாகவே, சிலதை உருவகப்படுத்திக்கொண்டு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
நடிகர் ஒய் ஜி மகேந்திராவின் மகளும், கல்வி ஆர்வலருமான மதுவந்தி முதலில் வெளியிட்ட வீடியோ பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இரண்டாவது வீடியோவை வெளியிட்டிருந்தார்.
சொல்லும் தகவல்களுக்கு ஆதாரமாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகையை சுட்டிக்காட்டுகிறார்.
இந்தியாவில் 8,000 கோடி மக்களுக்கு ரூ.5000 கோடியை அவர்களது வங்கிக் கணக்கில் ‘உஜ்வாலா’ திட்டத்தின் கீழ் மோடி செலுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளார் மதுவந்தி. இந்தியாவின் மக்கள்தொகை 140 கோடி. உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகையின் கூட்டுத்தொகை கூட 8,000 கோடி வராது. அவர் வழியிலேயே சென்றாலும், 8,000 கோடி பேருக்கு ரூ. 5,000 கோடியை பிரித்துக் கொடுத்தால் ஒருவருக்கு 1 ரூபாய் கூட தர முடியாது. அதுமட்டுமா, 30,000 கோடியில் 40 சதவீதம் 20,000 கோடி என்கிறார். அனைத்தும் பெண்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகச் சொல்கிறார். மொத்த ஜன் தன் வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கையே 36.25 கோடிதான்
கோரிக்கை : வேண்டுகோள் : நாங்கள் ஆங்கிலம், கணக்கு எல்லாம் படித்துத் தேறிவிட்டோம். 30,000 கோடியில் 40% 20,000 கோடி, இந்திய மக்கள்தொகை 8,000 கோடி என்று ‘கொரோனா ஊரடங்கு’ காலத்தில் சாவகாசமாக அமர்ந்து வடை சுட்டுக் கொண்டிருக்காமல் கணக்கு வாய்ப்பாட்டையாவது படித்துவிட்டு வீடியோ வெளியிடுங்கள் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மதுவந்தி வீடியோ விவகாரம் #மதுவந்தி என்ற ஹேஷ்டேக், டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

You don't need someone to tell you what benefits that central govt is providing to citizens.
Iam a patriot and a Tamil woman.
Iam following the Prime Minister & govt officials. I get to know from them. I support / criticize accordingly.
Tamilians, be Indians first.
Patriotic_Soul-இன் பிற கீச்சுகளைப் பார்க்கவும்