செவ்வாய், 14 ஏப்ரல், 2020

சென்னை, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்!

Image
சென்னை, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ளது. இதனால், சென்னை மாநகரில் வீட்டைவிட்டு வெளியே செல்லும் போது, அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் அறிவித்துள்ளார். முகக் கவசம் அணியாதவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். 
கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கோவையிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ள மாவட்ட ஆட்சியர் ராசாமணி, கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். இதே போல, திருப்பூரில் நேற்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படதால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 3 வது இடத்துக்கு சென்றுள்ளது. இதையடுத்து, பொதுவெளியில் நடமாடும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாக அறிவித்துள்ளது. 
credit ns7.tv