நம்மை ஆள்வது பாசிசமா? - அச்சரேகை | Acha Regai | FASCISM
Credit : A Documentary about Fascism | Acha Regai கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி
சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பாக விசாரணை செய்த மாஜிஸ்திரேட்டிடம் ஒருமையில் பேசிய விவகாரம் தொடர்பாக மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உள்பட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இரண்டு வியாபாரியின் மர்ம மரணம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையானது கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசனை விசாரணை நடத்த உத்தரவிட்டது. நேற்று முன்தினம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மதியம் 12 மணிக்கு தொடங்கிய விசாரணையானது நேற்று அதிகாலை 4 மணி வரை தொடர்ந்து 16 மணி நேரம் நடந்தது.
விசாரணையின் போது தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் மற்றும் சாத்தான்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 3 பேர் தனக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னை ஒருமையில் பேசியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் மற்றும் சாத்தான்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகிய இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். காவலர் மகாராஜனை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வேண்டாம் என்று தமிழக அரசுக்கு மருத்துவக் குழுவினர் பரிந்துரைத்துள்ளனர்.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோயை கட்டுக்குள் வைக்கும் பொருட்டு கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பின்னர் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் தவிர தமிழகத்தில் பிற பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், சென்னையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமானதையடுத்து, கடந்த 19ம் தேதியிலிருந்து வரும் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
பிரான்சிலிருந்து முதற்கட்டமாக 6 Rafale போர் விமானங்கள் ஜூலை 27ம் தேதி இந்தியாவை வந்தடையும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - சீனா இடையே எல்லையில் பதற்றமான சூழல் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்தியாவின் போர்திறனை உயர்த்தும் வகையிலான 6 ரஃபேல் போர் விமானங்கள் ஜூலை 27ல் பிரான்சில் இருந்து இந்தியாவை வந்தடையும் என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமானங்களின் வருகை இந்திய விமானப் படையின் போர் திறனை மேம்படுத்தும் என்றும், எதிர்த்து நிற்கும் நாடுகளுக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்பும் வகையில் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அம்பாலா (ஹரியானா) விமானப்படை தளத்தில் இந்த போர் விமானங்கள் நிறுத்தப்படும் என கூறப்படுகிறது.
கடந்த 2016ம் ஆண்டு ரூ.60,000 கோடி செலவில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இந்திய அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன் ஒரு அங்கமாகவே தற்போது ரஃபேல் விமானங்கள் இந்தியா வர உள்ளன. இவை முழுமையான அளவில் ஆயுதங்கள் பொருத்தப்பட்டவையாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்த விமானம் சக்திவாய்ந்த ஆயுதங்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது. இந்த விமானங்களில் பொருத்தப்படக்கூடிய ஏவுகணைகள் மூலம் 150 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை தாக்க முடியும். இந்த போர் விமானங்கள் அதிநவீன வசதிகளை கொண்டது. இதன் மூலம் வானில் இருந்து வானுக்கும், வானில் இருந்து நிலத்துக்கும் தாக்குதலை மிகத்துல்லியமாக நடத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானிகள் சிலருக்கு முதல்கட்டமாக பிரான்ஸ் ஏர்பேஸில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு 2வது கட்டமாக மேலும் சில விமானிகள் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்படவிருக்கிறார்கள். 2வது கட்டமாக வரவிருக்கும் ரஃபேல் போர் விமானங்கள் மேற்கு வங்காளத்தின் ஹசிமாரா தளத்தில் நிறுத்தப்படும் என கூறுகின்றனர். இரண்டு தளங்களிலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் இந்திய விமானப்படை இதற்காக ரூ.400 கோடி செலவிட்டுள்ளது.
ரஃபேல் விமானங்கள் பாகிஸ்தான் மற்றும் சீன விமானப்படைகளுக்கு சவால்விடுக்கக்கூடியவை என்றும் 2 நாடுகளின் போர் விமானங்களும் நிகரில்லாத திறன் பெற்றவை என்பதால் இந்தியாவுக்கு அசுர பலத்தை ரஃபேல் விமானங்கள் அளிக்க இருப்பதாக பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் அச்சுறுத்தல்களை சமாளிக்க இந்தியாவுக்கு பெரும் சாதகமான அம்சமாக ரஃபேல் இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில், 1.7.2020 முதலும், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகள் மற்றும் மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 6.7.2020 முதலும் கீழ்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.
1. கிராமப்புரங்களில் உள்ள சிறிய திருக்கோயில்கள், அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோயில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவாலயங்களிலும் மட்டும் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும். இத்தகு வழிபாட்டுத்தலங்களில் சமூக இடைவெளி மற்றும் பிற நோய் தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும், கிராமப்பகுதிகளில் உள்ள பெரிய வழிபாட்டுத் தலங்களுக்கும் தற்போதுள்ள நடைமுறைப்படி பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.
2. தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
3. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், 20 விழுக்காடு பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும்.
4. அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.
5. வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு
பணியாளர்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் இருக்கும் பொருட்டு தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அனுமதிக்கப்பட வேண்டும். (கடைகளில், குளிர் சாதன வசதி இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது)
6. தேநீர் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. டாஸ்மாக் உள்ளிட்ட இதர கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம்.
7. உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன வசதி இருப்பினும், அவை இயக்கப்படக் கூடாது.
8. தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.
9. அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் வழங்க அனுமதிக்கப்படுகிறது.
10. வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்கள் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
11. ஆட்டோக்கள் இரண்டு பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. சைக்கிள் ரிக்ஷாவும் அனுமதிக்கப்படுகிறது.
12. மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள், மற்ற இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள் சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.
ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் இரு தலைவர்களான பிரதமர் கே பி ஷர்மா ஒலி மற்றும் புஷ்பா கமல் தஹால் ஆகியோரிடையே ஏற்பட்டுள்ள மோதல் தீவிரமடைந்து வருவதால், தன்னை வீழ்த்துவதற்காக இந்தியா தனது போட்டியாளர்களைத் தூண்டுவதாக பிரதமர் ஒலி குற்றம் சாட்டியுள்ளார்.
“அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் நடக்கும் விஷயங்கள் சிந்திக்க முடியாதது. டெல்லி ஊடகங்களைக் கேளுங்கள். இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டங்களைப் பாருங்கள்” என்று ஓலி கூறினார், தனது அரசாங்கத்தை கவிழ்க்க“ சதி ”என்று கூறப்படுகிறது. “வெளி சக்திகள் உள்ளே நுழைந்து கவிழ்க்கும் , நேபாளத்தின் தேசியவாதம் என்பது பலவீனமானதல்ல என்பதை நீங்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டும்” என்று பிரதமர் ஒலி கூறினார்.
துகுறித்து மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் மதன் பண்டாரி நினைவாக தன் இல்லத்தில் நடத்தியக் கூட்டத்தில் நேபாள் பிரதமர் கே.பி.ஒலி கூறும்போது, “டெல்லியிலிருந்து இது தொடர்பாக செய்திகள் வருகின்றன. நேபாளின் வரைபடத்தை நாங்கள் மாற்றி வெளியிட்டதற்கு இந்தியா தரப்பில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. எனக்கு பெரும்பான்மை உள்ளது அதனால் என்னை ஒன்றும் அசைக்க முடியாது.
நேபாளின் தேசியவாதம் பலவீனமானதல்ல. பிரதமரை 15 நாட்களில் மாற்றிவிடலாம் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தச் சமயத்தில் என்னை வெளியேற்றிவிட்டால் நேபாளத்துக்கு ஆதரவாக பேச ஒருவரும் இருக்க மாட்டார்கள். ஏனெனில் அந்த நபர் உடனடியாக நீக்கப்பட்டு விடுவார். நான் எனக்காகப் பேசவில்லை, நாட்டுக்காகப் பேசுகிறேன். நம் கட்சி, நம் நாடாளுமன்ற கட்சிகள் இந்தப் பொறிகளில் சிக்கக் கூடாது. இதற்காக முயற்சிப்பவர்கள் முயற்சிக்கட்டும். ” என்றார்.
நாடாளுமன்றத்தில் பிரசந்தாவுக்கு எதிர்க்கட்சியினரும் மாதேஇ சி பிரிவு உறுப்பினர்களும் ஆதரவளிப்பதாகத் தெரிகிறது.
மக்கள் வாழும் பகுதியில் அளவுக்கு அதிகமாக வெள்ள நீர் புகுந்துள்ள காரணத்தால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளது. பொதுமக்கள் முகாம்களுக்கும், பாதுகாப்பான பகுதிகளுக்கும் இடம் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே கொரோனா பாதிப்பு காரணத்தால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் இருக்கின்ற நிலையில் இந்த வெள்ள பாதிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒற்றைக் கொம்பு காண்டாமிருங்கள் அதிகம் வாழும் பகுதியான கஸிரங்கா பூங்காவில் 40% வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. வனவிலங்குகளின் வாழ்விடங்களுக்கு பெரும் அச்சுறுத்தல் நிலவியுள்ள நிலையில், அவை பொது இடங்களுக்கு வரும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.
Youth Congress Stag protest against petroleum price hike at front of Shashtri Bhavan : பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா நோய் தொற்று காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் பெரும் மோசம் அடைந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட எதிர்கட்சியினர் பலரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் மாட்டு வண்டி, சைக்கிள், குதிரை வண்டிகளில் வந்து, சாஸ்திரி பவன் முன் நின்று காங்கிரஸ் இளைஞரணி உறுப்பினர்கள், மகிளா காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிரத்யேக காட்சிகள். Express Photos by Prem Nath pandey.
சாஸ்திரி பவன் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்
மக்கள் பலர் வேலையின்றி வாடி வருகின்றனர். இந்நிலையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலையால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் அவல நிலை உருவாகியுள்ளது.
மாட்டு வண்டியுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் கட்சியினர்
கடந்த 7ம் தேதி முதல் 21 நாட்களாக தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த 21 நாட்களில் பெட்ரோலின் விலை ரூ. 9.12 வரை உயர்ந்துள்ளது. அதே போன்று டீசலின் விலையும் ரூ. 11.01 வரை உயர்ந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான NSUI-ன் உறுப்பினர்கள் பெட்ரோல் டீசல் விலையேற்றத்திற்காக போராடிய காட்சிகள். Express Photo by Kamleshwar Singh
சண்டிகர் செக்டார் 10-ல் காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் காட்சி
பெட்ரோல் பங்க் முன்பு மோடியின் முகமூடி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்
ஐதராபாத்தில் உள்ள அரசு செஸ்ட் மருத்துவமனையில் கடந்த வாரம் ஒரு கொரோனா வைரஸ் நோயாளி, அவரை வென்டிலேட்டரில் வைக்க மறுத்ததாகக் கூறி இறந்தார். இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த மருத்துவமனை அதிகாரிகள், அந்த நோயாளி இதயத்துடிப்பை அதிகரித்து மையோகார்டிடிஸ் ஏற்பட்ட பின்னர் இறந்துவிட்டார் என்று கூறினார்கள்.
வீடியோவில் இறப்பதற்கு முன்பு அந்த நோயாளி மருத்துவமனையின் தனிமைப்படுத்தும் வார்டில் அந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில், அவர் தனது தந்தையிடம் பேசியுள்ளார். 35 வயதான வி ரவிக்குமார், அவருக்கு சுவாசப் பிரச்னை இருப்பதாக மருத்துவர்களிடம் புகார் தெரிவித்த பிறகும், மருத்துவர்கள் அவருக்கு வெண்டிலேட்டரை வழங்கவில்லை என்று கூறியுள்ளார். அந்த நோயாளி வீடியோவில், “கடந்த 3 மணி நேரமாக என்னை வென்டிலேட்டரில் வைக்குமாறு அவர்களிடம் மன்றாடி வருகிறேன். நான் சுவாசிக்க சிரமப்படுகிறேன். என் இதயம் நின்றுவிட்டதைப் போல உணர்கிறேன். அவர்கள் நான் சொல்வதைக் கேட்கவில்லை. அவர்கள் என்னை வென்டிலேட்டரில் வைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் அந்த வீடியோவில், “பை அப்பா. அனைவருக்கும் பை, பை அப்பா” என்று கூறியுள்ளார்.
ரவிக்குமார் ஜூன் 24ம் தேதி காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே நாளில் அவரிடம் இருந்து கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருந்தனர். இந்த நிலையில், அவர் 2 நாட்களுக்குப் பிறகு மரணம் அடைந்தார். 27-ம் தேதி வந்த பரிசோதனை அறிக்கையில் கொரோனா வைரஸ் தொற்று இருந்தது உறுதியானது.
உயிரிழந்த ரவிக்குமாரின் தந்தை தனது மகனை ஒரு மருத்துவமனையில் சேர்ப்பதற்கு பட்ட சிரமத்தைப் பற்றி கூறுகையில், “எனது மகன் ஜூன் 23 அன்று அதிக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். அனைத்து மருத்துவமனைகளும் அவனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தன. எனது மகன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகித்து, முதலில் ஒரு பரிசோதனை அறிக்கையை கேட்டார்கள். நாங்கள் குறைந்தது 12 மருத்துவமனைகளை பார்த்தோம். ஆனால், பரிசோதனை அறிக்கை இல்லாமல் யாரும் அனுமதி வழங்கவில்லை.” என்றார்.
அடுத்த நாள் குடும்பத்துடன் கர்கானாவில் உள்ள ஒரு தனியார் ஆய்வகத்தை பார்வையிட்டனர். அங்கு ஊழியர்கள் சோதனை மாதிரிகள் அதிக அளவில் உள்ளதால் மூசாபேட்டில் உள்ள அவர்களுடைய மற்றொரு கிளைக்கு அனுப்பினார்கள்.
நிஜாமின் மருத்துவ அறிவியல் நிறுவனம் (நிம்ஸ்) மற்றும் காந்தி பொது மருத்துவமனை உள்ளிட்ட பல அரசு மருத்துவமனைகளுக்குச் சென்றபின், தனது மகன் ஜூன் 24-ம் தேதி செஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ரவிக்குமாரின் தந்தை வெங்கடேஸ்வர்லி கூறினார்.
மருத்துவமனையில் மூச்சுத் திணறல் ஏற்பட்ட நோயாளிக்கு வெண்டிலேட்டர் வழங்க மறுத்ததால் இறந்ததாக எழுந்துள்ள புகார் குறித்து எர்ராகடாவில் உள்ள அரசு மார்பு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் மஹபூப் கானைத் தொடர்பு கொண்டபோது, குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், அந்த நோயாளி மாரடைப்பு ஏற்பட்ட பின்னர் காலமானார் என்றும் கூறினார்.
வீடியோவில், ரவிக்குமாரை ஆக்ஸிஜன் வழங்குவதற்காக நாசி முனைகளுடன் இருப்பதைக் காணலாம்.
“அவர் ஒரு கோவிட் நோயாளி என்று சந்தேகிக்கப்படுகிறது. நாங்கள் அவரை தனிமை வார்டில் அனுமதித்து ஆக்ஸிஜன் சப்ளை செய்தோம். அவரது உடல் நிலை பராமரிக்கப்பட்டன. துரதிர்ஷ்டவசமாக, அவர் இதயத்துடிப்பை அதிகப்படுத்தி மயோகார்டிடிஸைஉருவாக்கினார். அது இதயத்தின் திடீர் நிறுத்தத்துக்கு வழிவகுத்தது. அவரது விஷயத்தில் இதுதான் நடந்தது” என்று கண்காணிப்பாளர் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.
மேலும், நோயாளி ரவிக்குமார் இறந்த ஒரு நாள் கழிந்த பிறகுதான் கொரோனா வைரஸிற்கான பரிசோதனை முடிவு பெறப்பட்டதாக அந்த அதிகாரி உறுதிப்படுத்தினார்.
ஐதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை 983 புதிய கொரோனா வைரஸ் தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. ஜூன் 28-ம் தேதி நிலவரப்படி தெலங்கானாவின் கோவிட்-19 எண்ணிக்கை 14,414 ஆக உள்ளது. அவர்களில் 9,000 பேர் சிகிச்சையில் உள்ளனர். அம்மாநிலத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 247ஐ எட்டியுள்ளது.
இந்தியாவில் சீன செயலிகளுக்கு தடை என மத்திய அரசு நேற்று இரவு வெளியிட்ட அறிவிப்பால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டிக்டாக், ஷேர்இட், யுசி பிரவுசர், லைக், விசேட் மற்றும் பைகோ லைவ் உள்ளிட்ட 59 சீன நாட்டைச் சேர்ந்த செயலிகளை மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் தடை செய்துள்ளது. அவை “இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு கேடு விளைவிப்பவை என்று மத்திய அமைச்சகம் கூறியுள்ளது.
சீன துருப்புக்களுடன் லடாக்கில் சரியான கட்டுப்பாட்டு கோட்டியில் தற்போதைய நிலைமையின் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீன செயலிகளுக்கு எதிராக இந்திய அதிகாரிகளிடமிருந்து விமர்சனங்கள் மற்றும் தாக்குதல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நடவடிக்கை சீன தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிரான மிகப்பெரிய வெற்றியைக் குறிக்கிறது.
“தரவு பாதுகாப்பு மற்றும் 130 கோடி இந்தியர்களின் தனியுரிமையைப் பாதுகாத்தல் தொடர்பான அம்சங்களில் கடுமையான கவலைகள் உள்ளன. இதுபோன்ற கவலைகள் நமது நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமைகின்றன என்பது சமீபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கும் சில மொபைல் பயன்பாடுகளை தவறாகப் பயன்படுத்துவது குறித்து பல அறிக்கைகள் உட்பட பல ஆதாரங்களில் இருந்து தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பல புகார்களைப் பெற்றுள்ளது. இந்த தரவுகளின் தொகுப்பு, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு விரோதமான கூறுகளின் சுரங்கமாகவும் விவரக்குறிப்புகளாகவும் உள்ளன. இது இறுதியில் இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதிக்கிறது. இது மிகவும் ஆழமான மற்றும் உடனடி கவலைக்குரிய விஷயமாகும். இதில் அவசர நடவடிக்கை தேவை.”
உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய சைபர் குற்றத் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் இந்த தீங்கிழைக்கும் பயன்பாடுகளை தடுப்பதற்கான முழுமையான பரிந்துரையை அனுப்பியுள்ளது. “தரவுகளின் பாதுகாப்பு மற்றும் சில பயன்பாடுகளின் செயல்பாடு தொடர்பான தனியுரிமைக்கு ஆபத்து குறித்து குடிமக்களிடமிருந்து கவலைகளை எழுப்பும் பல பிரதிநிதித்துவங்களையும் இந்த அமைச்சகம் பெற்றுள்ளது.”
கூடுதலாக, தரவுகளின் பாதுகாப்பு தொடர்பாக குடிமக்களிடமிருந்து CERT-IN பிரதிநிதித்துவங்களையும் பெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த பிரச்சினையை சுட்டிக்காட்டியுள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015-19 ஆம் ஆண்டில், அலிபாபா, டென்சென்ட், டிஆர் கேபிடல் மற்றும் ஹில்ஹவுஸ் கேபிடல் உள்ளிட்ட சீன முதலீட்டாளர்கள் இந்திய ஸ்டார்ட் அப்களில் 5.5 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளனர். அவை இந்தியாவில் தனியார் பங்கு, துணிகர மூலதனம், எம் அண்ட் ஏ பரிவர்த்தனைகள் மற்றும் மதிப்பீடுகளை கண்காணிக்கிறது என்று வென்ச்சர் இன்டலிஜென்ஸ் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் வரும் ஜூலை 31 ஆம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமலில் உள்ள ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காக ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடனும் தளர்வுகளுடனும் ஜூலை 31ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது என்று முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது அமலில் உள்ள 5வது கட்ட ஊரடங்கு நாளை ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இந்நிலையில், முதல்வர் பழனிசாமி தமிழகம் முழுவதும் ஜூலை 31-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஏற்கெனவே உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது என்று அறிவித்துள்ளார். மேலும், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் திருவள்ளூர் மாவட்டத்தில் பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், அதே போல, செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை அமல்படுத்திய 12 நாள் முழு ஊரடங்கு உத்தரவு ஜூலை 5-ம் தேதி வரை தொடரும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு நீட்டிப்பு செய்து முதல்வர் பழனிசாமி விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு, கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை உடனுக்குடன் வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால் தான் தமிழ்நாட்டில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது. அதே நேரத்தில், தமிழக அரசு மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து பொருளாதாரத்தை மேம்படுத்த அவ்வப்போது பல்வேறு தளர்வுகளை வழங்கி வருவதுடன், சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு புதிய முதலீடுகளை ஈர்த்தும், ஊரகத் தொழில்களை மீட்டெடுத்தும் தொழில் வளத்தைப் பெருக்க புதிய திட்டங்களை செயல்படுத்தியும் வருகின்றது.
இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசு தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், மார்ச் 25 முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. இதைத் தொடர்ந்து, கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதே சமயம், ஏழை மக்கள் ஊரடங்கால் எதிர்கொண்டுள்ள சிரமங்களைக் களைய, ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான ரேசன் பொருட்கள் அனைத்தும், 2.01 கோடி குடும்பங்களுக்கும் விலையில்லாமல் வழங்க உத்தரவிட்டுள்ளதுடன், கட்டடத் தொழிலாளர்கள், அமைப்புசாரா ஓட்டுநர்கள் ஆகியோருக்கு அரிசி போன்ற பொருட்களை கூடுதலாக வழங்கியும், அனைத்து 17 அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் மற்றும் பல்வேறு துறையில் உள்ள பிற நல வாரிய தொழிலாளர்களை சேர்த்து 35.65 லட்சம் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே தலா 1,000 ரூபாய் வழங்கியதைப் போல், மீண்டும் தலா 1,000 ரூபாய் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்கள்.
ஜூன் 29 இன்று மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் முதல்வர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், தற்போது எடுக்கப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக இருப்பதால் தான், கொரோனா நோய்த்தொற்று ஓரளவு கட்டுக்குள்
கொண்டுவர முடிந்தது எனவும், நோய் தடுப்பு கட்டுப்பாட்டு பகுதிகளில் நோய் தடுப்பு பணிகளும் கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்த வேண்டும் என கருத்துகளை தெரிவித்தார்கள். பல்வேறு தினங்களில் முதலமைச்சர் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில், குறிப்பாக ஜூன் 22 அன்று நடத்தப்பட்ட காணொலிக் காட்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், ஊரடங்கை தளர்த்துவதற்காக நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலும், ஜூன் 29 இன்று பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த
அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து, கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் தற்போது ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைய உள்ள ஊரடங்கு உத்தரவு, ஜூலை 31-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
எனினும் முழு ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ள பகுதிகளான பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்- கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நோய்த்தொற்று அதிகம் உள்ளதை கருத்தில் கொண்டு, நோய்ப்பரவலை தடுக்க நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் பேரிடர் மேலாண்மை சட்டம், 2005ன் கீழ் ஜூன் 19 அதிகாலை 12.00 மணி முதல் ஜூன் 30ம் தேதி இரவு 12 மணி வரை 12 நாட்களுக்கு அமல்படுத்திய முழு ஊரடங்கு உத்தரவு மற்றும் மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஜூன் 24-ம் தேதி அதிகாலை 12 மணி முதல் ஜூன் 30-ம் தேதி இரவு 12 மணி வரை 7 நாட்களுக்கு அமல்படுத்திய முழு ஊரடங்கு, கொரோனா நோய்த்தொற்றை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதற்கு உதவியதால், இந்த முழு ஊரடங்கு மேற்கண்ட பகுதிகளில் மட்டும் ஜூலை 5-ம் தேதி வரை தொடரும்.
ஜூன் 19ம் தேதிக்கு முன்னர் சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் இருந்த ஊரடங்கின் நிலையே ஜூலை 6-ம் தேதி அதிகாலை 12 மணி முதல் ஜூலை 31-ம் தேதி நள்ளிரவு 12.00 மணிவரை தொடரும். அதேபோல் மதுரை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் ஜூன் 24-ம் தேதிக்கு முன்னர் இப்பகுதிகளில் இருந்த ஊரடங்கின் நிலையே ஜூலை 6-ம் தேதி அதிகாலை 12 மணி முதல் ஜூலை 31-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தொடரும்.
ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காய்கறி, பழக்கடைகளைப் போன்று, பெருநகர சென்னை மாநகராட்சி, மாநகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளிடம் இருந்து முறையான வியாபார அனுமதி பெற்ற மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள் சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.ஏற்கனவே நடைமுறையில் செயல்பாடுகளுக்கானதடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Arun Janardhanan
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்த தந்தை – மகன் உயிரிழப்பு விவகாரம் தொடர்பான நீதி விசாரணைக்கு போலீசார் தகுந்த ஒத்துழைப்பு தருவதில்லை. அதற்கான ஆதாரங்களை அவர்கள் அழித்துள்ளனர் என்று நீதிவிசாரணை நடத்திய நீதிபதி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேசனிற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் அங்கு கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். அங்கு அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அவர்கள் கோவில்பட்டி கிளைச்சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் 22ம் தேதி உயிரிழந்துவிட்டதாக கோவில்பட்டி நீதி விசாரணை நீதிபதி பாரதிதாசன், உயர்நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நீதி விசாரணை அதிகாரி பாரதிதாசனின் இந்த புகாரை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, சாத்தான்குளம் காவல்நிலையத்தை, தூத்துக்குடி கலெக்டரின் கட்டுப்பாட்டில் கொண்டுவர உத்தரவிட்டார். மேலும், ஏஎஸ்பி டி.குமார், டிஎஸ்பி பிரதாபன், கான்ஸ்டபிள் மகாராஜன் உள்ளிட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கை, சிபிஐ விசாரிக்க தமிழக அரசு தொடர்ந்த கோரிக்கைக்கு அனுமதி அளித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ் மற்றும் பெலிக்ஸ் இரவுமுழுவதும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். போலீசார் லத்திகள் மூலம் அவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். பின் ரத்தக்கறை படிந்த அந்த லத்திகளை அவர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து போலிசாரிடம் கேட்டபோது அவர்கள் லத்திகளை அளிக்க மறுத்த நிலையில், நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்த பிறகே, அவர்கள் லத்திகளை ஒப்படைத்தனர். இதன்மூலம், ஜெயராஜ், பென்னிக்ஸ் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டது புலனாகிறதாக நீதிவிசாரணை அதிகாரி உயர்நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.45 மணியளவில், நீதிவிசாரணை அதிகாரி பாரதிதாசன், சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு சென்றுள்ளார். அந்தநேரத்தில், ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் உள்ளிட்ட 2 அதிகாரிகள் இருந்துள்ளனர். தான் விசாரணையை துவக்கியபோது, ஒத்துழைக்க முடியாது என்று ஏஎஸ்பி குமார் என்னிடம் மல்லுக்கட்டினார்.
போலீஸ் ஸ்டேசனின் அன்றாட நடவடிக்கைகள் குறித்த பதிவேட்டை தருமாறு கேட்டபோது அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தபிறகு, ஒவ்வொரு ஆவணங்களாக கொண்டு வந்து தந்தனர். இதன்காரணமாக, அதிக நேரவிரயம் ஏற்பட்டது.
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கேட்டபோது தினமும் இரவு அதனை அழித்துவிடுவதாக அவர்கள் தெரிவித்தனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் தாக்கப்பட்ட காட்சிகள் கூட 19ம் தேதி இரவே அழிக்கப்பட்டிருந்தன. ஹார்ட் டிஸ்கை சோதித்தபோது, அந்த காட்சிகள் அழிக்கப்பட்டிருந்தது உறுதியானது.
நீதிவிசாரணை நடைபெறும்போது நிகழ்வுகளை போட்டோவாகவும், வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டன. முதற்கட்டமாக, கான்ஸ்டபிள் மகாராஜன் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். முதலில் மறுத்த அவர் பின் விசாரணைக்கு வந்தார். அவரிடம் பாரதிதாசன் விசாரணை நடத்தியபோது, உன்னால் ஒண்ணும் புடுங்க முடியாது என்று நீதிவிசாரணை அதிகாரியை நோக்கி அவர் கூறியிருந்தார்.
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட லத்திகள் குறித்து கேட்டபோது, அதை ஊருக்கு கொண்டுபோய்விட்டதாக கூறிய அவர்கள் பின், போலீஸ் குடியிருப்பில் மறைத்து வைத்ததாக தெரிவித்தனர். போய் கொண்டுவர பணித்தபோது அவர்கள் மறுத்தனர். பின் போகமுடியாது என்று கூறினர். இந்த விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே, போலீஸ் ஸ்டேசனில் இருந்த ஒருவர் வெளியே தப்பியோடினார்.
19ம் தேதி இரவு, அந்த ஸ்டேசனினில் தலைமை காவலர் ரேவதியும் உடன் இருந்துள்ளார். போலீசாரின் இந்த நடவடிக்கைகளால் ரேவதி அதிர்ந்து போயிருந்தார். ரேவதிக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று நீதி விசாரணை அதிகாரி அளித்த உறுதிமொழியின்பேரில், அவர் உண்மைகளை சொல்ல சம்மதித்தார்.
போலிஸ் ஸ்டேசனுக்கு வெளியில் கூடியிருந்த மற்ற போலீசார், நீதி விசாரணை அதிகாாரியை கடும்சொற்களால் வசைபாடிக்கொண்டிருந்தனர். சிலர் இந்த விசாரணை நிகழ்வை தங்களது மொபைல்போனில் பதிவு செய்துகொண்டிருந்தனர்.
ஸ்டேசனில் இருந்த ஒவ்வொரு நிமிசமும் தாங்கள் பாதுகாப்பு இல்லாத நிலையை உணர்ந்ததாக நீதிவிசாரணை அதிகாரி பாரதிதாசன் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகார் குறித்து தமிழக டிஜிபி திரிபாதியிடம் கேட்டபோது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அருண் பாலகோபாலனிடம் கேட்டதற்கு, பிறகு பதிலளிப்பதாக அவர் தெரிவித்தார்.
நீதி விசாரணை அறிக்கை இதுவரை தன்னிடம் வரவில்லை என்று தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவின்பேரில், புகாருக்குள்ளான காவல்துறையினர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். உத்தரவு இன்னும் தனது கைக்கு கிடைக்கவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புவதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
போலீசுக்கு புதிய சிக்கல் : ஜெயராஜ் கடைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் வெளியாகியுள்ளன. இதில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரது கடைகள் மட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள மற்றக் கடைகளும் திறந்திருந்தன. மேலும், அவர்கள் இருவரும் போலீஸார் கைது செய்தபோது எந்தப் போராட்டமும் நடத்தவில்லை, போலீஸாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபடவில்லை. ஜெயராஜ் போலீஸ் வாகனத்திலும், பென்னிக்ஸ் நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளிலும் ஏறி காவல் நிலையம் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
மேலும், இருவரும் நல்ல நிலையில் இயல்பாக நடந்தே செல்கின்றனர். இதன் மூலம் இருவரும் அன்று இரவு காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்ட பிறகே காயமடைந்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த வீடியோ காட்சி சாத்தான்குளம் போலீஸாருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் மீது நடவடிக்கை : தூத்துக்குடி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் D.குமார் மற்றும் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் C.பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நீதிபதியை தரக்குறைவாக பேசிய
காவலர் மகாராஜன் மட்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
sathankulam jayaraj and Bennicks death cctv footage : சாத்தான்குளத்தில் தந்தை, மகன் லாக்அப் மரணம் சம்பவம் தொடர்பாக புதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சியில் இடம்பெற்றுள்ள நிகழ்வுகளும், சம்பந்தப்பட்ட போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விளக்கங்களும் முரண்பாடுகளாக இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 19-ம் தேதி இரவு சாத்தான்குளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழகத்தையே உலுக்கிய இந்த இரண்டு மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இன்று (30.6.20) இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.
இந்நிலையில் தற்போது இந்த சம்பவம் தொடர்பாக புதிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக போலீஸார் முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்த தகவல்களுக்கு மாறான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது காவல் துறையினருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகிய இருவரையும் கடந்த 19-ம் தேதி இரவு கைது செய்தது தொடர்பாக போலீஸார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில், அவர்கள் கடையை இரவு 9 மணிக்கு மேல் நிர்ணயித்த நேரத்தை தாண்டி திறந்து வைத்திருந்ததாக கூறியிருந்தனர். மேலும், அவர்களை கைது செய்ய போலீசார் முயற்சித்த போது இருவரும் சண்டையிட்டதாகவும், தரையில் உருண்டு பிரண்டு போலீசாருடன் செல்ல மறுத்து போராட்டம் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், வெளியான சிசிடிவி காட்சியில் இதுப்போன்ற எந்த சம்பவங்களும் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. கூடவே, ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகியோரது கடைகள் மட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள மற்றக் கடைகளும் திறந்திருக்கின்றனர்.மேலும், அவர்கள் இருவரும் போலீஸார் கைது செய்தபோது எந்தப் போராட்டமும் நடத்தவில்லை, போலீஸாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபடவில்லை.
CCTV footage near the mobile shop run by the late Bennicks in #Sathankulam contradicts the FIR report. The footage shows #JayarajandBennicks never resisted police arrest, there were no arguments, they didn't roll on the floor and sustain internal injuries as FIR claimed.
வெளியே நின்றுக் கொண்டிருக்கும் ஜெயராஜ் முதலில் போலீசார் வந்து விசாரிக்கும் போது பதில் கூறுகிறார். சிறிது நேரம் கழித்து, அந்த போலீசார் ஜெயராஜை அழைக்கிறார்கள். அவர் வேகமாக சென்று அவர்களிடம் மீண்டும் பேசுகிறார். தந்தை ஓடியதை கண்டு கடைக்குள் இருந்த பெனிக்ஸ் உடனே வெளியே வருகிறார். அதன் பின்பு, ஜெயராஜ் போலீஸ் வாகனத்திலும், பென்னிக்ஸ் நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளிலும் ஏறி காவல் நிலையம் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
இருவரும் நல்ல நிலையில் இயல்பாக நடந்தே செல்கின்றனர். இதன் மூலம் இருவரும் அன்று இரவு காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்ட பிறகே காயமடைந்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.
இந்த வீடியோ காட்சி சாத்தான்குளம் போலீஸாருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளில் உள்ள அனைத்து பெரிய பெரிய ஆராய்ச்சி நிறுவனங்களும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முனைப்பில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்தினை கண்டறிந்துள்ளாதாக அறிவித்துள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த இந்நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. மேலும் மனிதர்கள் மீது இம்மருந்தினை கொண்டு ஆராய்ச்சி நடத்த ட்ரக் கண்ட்ரோல் ஜெனரல் ஆஃப் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவாக்ஸின் (Covaxin) எனப்படும் இந்த மருந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூட்டணியுடன் ஜீனோம் வேலி ப்ளாண்ட்டில் கண்டறியப்பட்டுள்ளது. மனிதர்கள் மீதான ஆராய்ச்சிகள் ஜூலை மாதத்தில் துவங்க உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்ட்ராவின் புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆராய்ச்சி நிறுவனத்தில் SARS-CoV-2 வைரஸின் ஸ்ட்ரெய்ன் தனிமைப்பட்டு பின்னர் ஐ.சி.எம்.ஆர் இந்த மாதிரியை ஹைதராபாத்திற்கு அனுப்பியது. ஆராய்ச்சி செய்த பாரத் பயோடெக் ஆராய்ச்சி மையத்தில் தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.
sathankulam jeyaraj fennix case : நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்அப் மரண வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளத்தில் செல்போன் கடை நடத்தியவர் ஜெயராஜ். கடந்த 19ம் தேதி இரவு ஊரடங்கு நேரத்தையும் தாண்டி, ஜெயராஜ் கடையைத் திறந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. . இதையடுத்து, அவரிடம் போலீசார் கடையை அடைக்கச் சொல்லி கடுமையாகப் பேசியிருக்கிறார்கள். இதற்கு ஜெயராஜ் எதிர்ப்பு தெரிவித்துப் பேசவே, போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
போலீஸ் நிலையத்தில் இருவரையும் போலீசார் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இருவரையும் கைது செய்த போலீசார், கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். அங்குத் தந்தை-மகன் இருவரும் இறந்துவிட்டனர். போலீசார் கடுமையாகத் தாக்கியதில் தந்தையும், மகனும் இறந்ததாகக் கூறி, அவர்களது உறவினர்கள், வியாபாரிகள் மற்றும் சாத்தான்குளம் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து, சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 ஏட்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மற்ற போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்துக்கு நீதி கேட்டு, தமிழகம் முழுவதும் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று சி.பி.ஐ.-க்கு மாற்றப்படும் என நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
இது தொடர்பான வழக்கு தற்போது சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அரசாணையை தமிழக உள்துறை வெளியிட்டுள்ளது.