ஞாயிறு, 7 ஜூன், 2020

வணிக வளாகங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

மத்திய அரசின் அறிவிப்படின் ஜூன் 8ம் தேதியன்று வணிக வாளகங்கள், வழிபாட்டுதலங்கள், உணவகங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள வணிக வளாகத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வணிக வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அதேபோல், வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல், பெங்களூரில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்ப முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டது. உணவகத்தில், வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து உணவு சாப்பிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பரவல் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ்கள் உணவகத்தில், ஒட்டப்பட்டுள்ளன. 

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு ஹோட்டலில் சமூக இடைவெளி விட்டு அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் போதுமானளவு சானிடைசர்கள் வைக்கப்பட்டுள்ளன.

காசியாபத்தில், உள்ள ஒரு வணிக வளாகத்தில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அதேபோல், வணிக வளாகத்தின் பல்வேறு பகுதிகளில், ஹேண்ட் சானிட்டைசர்கள் வைக்கப்பட்டுள்ளன. சமூக இடைவெளியுடன் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்க ஏதுவாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.