வெள்ளி, 12 ஜூன், 2020

ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்று வெளியான தகவல் தவறானது: முதல்வர் பழனிசாமி

ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்று வெளியான தகவல் தவறானது என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

மேட்டூர் அணை திறப்பு  நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், தனது பெயரில் வாட்ஸ் ஆப்பில் தவறாக தகவல் வெளிவந்துள்ளதாக கூறினார். தமிழகத்தில் ஊரடங்கு மேலும் கடுமையாக்கப்படும் என்று வெளியாகியுள்ள அந்த தகவலில் உண்மையில்லை என விளக்கமளித்த அவர், தவறான தகவலை பரப்பியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கொரோனாவின் வீரியத்தை மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பதாகவும் முதலமைச்சர் வேதனை தெரிவித்தார். சென்னையில் பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும், அதனால், அரசின் உத்தரவை மக்கள் மதிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, பாதிப்பு குறைந்த பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என்றார். தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பது பற்றி புகாரளித்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி எச்சரித்தார்


Related Posts: