வெள்ளி, 12 ஜூன், 2020

கொரோனா வந்ததும் தெரியாது போனதும் தெரியாது: ஆய்வில் தகவல்

 இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சமீபத்தில் நடத்திய ஆய்வில், கொரோனா ஹாட்ஸ்பாட்களில் இருந்த 30% மக்கள் அவர்களை அறியாமலேயே பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த பரிசோதனைக்கான இரத்த மாதிரிகள் மும்பை, சென்னை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட 89 மாவட்டங்கள் மற்றும் 10 ஹாட்ஸ்பாட்களில் இருந்து எடுக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் ஆராய்ச்சியாளார்கள் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் 500 ரத்த மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதோடு, சுமார் 30,000 மாதிரிகள் எலிசா சோதனை மூலம் பரிசோதித்தனர்.

இதில் 30 சதவீத மக்களுக்கு வைரஸ் நோய் எதிர்ப்பு சக்திகளான ஆன்டிபாடிகள் அதிகமாக இருப்பது மும்பை, டெல்லி, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் கண்டறியப்பட்டுள்ளன. நகர்ப்புற கொரோனா ஹாட்ஸ்பாட்கள் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் அதிகபட்சம் 30% பேர் அவர்களை அறியாமலேயே கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்துள்ளது ஐ.சி.எம்.ஆர் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின் அடிப்படையிலேயே நாட்டில் கொரோனா வைரஸ் சமூக பரவுதல் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related Posts: