12 08 2022
ஆதி திராவிட விவசாயிகள் டிராக்டர் வாங்குவதற்கு நிலம் அவசியம் என்ற முறை
ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் நிலம் இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தாட்கோ தலைவர் மதிவாணன் கூறியுள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் தொழில் முனைவோர் திட்டம் மற்றும் இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பிற்கான திட்டத்தின் கீழ் வங்கி கடனுதவிக்கான மாவட்ட அளவிலான தேர்வுக்குழு நேர்காணல் நடைபெற்றது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழக தலைவர் மதிவாணன்
நேர்காணலை தொடங்கி வைத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
திருவாரூர் மாவட்டத்தில் இந்தாண்டு ஜூன் 30 தேதி வரை 202 நபர்களுக்கு ரூ.158 லட்சம்
மானியமாக தாட்கோ மூலம் வழங்கப்பட்டுள்ளது. ஆதி திராவிட விவசாயிகளுக்கு டிராக்டர் கடன் வழங்குவதற்கு நிலம் அவசியமில்லை என்பதையும் தாட்கோ வழியாக நடைமுறைப்படுத்தியுள்ளோம்.
ஆதி திராவிடர் சமுதாய மக்களுக்கு தட்கல் மூலம் விவசாய மின் இணைப்பு
பெறுவதற்கு, மின் இணைப்பிற்கான கட்டணமும் ஆதி திராவிடர் நலத் துறையின் சார்பில்
செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு திட்டங்களை தமிழக
அரசு செயல்படுத்தி வருகிறது என்றார் மதிவாணன்.
நிகழ்ச்சியில் காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் தபூண்டி.கே.கலைவாணன, மாவட்ட ஊராட்சித் தலைவர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
source https://news7tamil.live/adi-dravidian-farmers-to-buy-tractors-need-land-to-cancel-tadco.html