கண்ணூர் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியையாக முதல்வரின் தனிச் செயலாளர் கே.கே.ராகேஷின் மனைவி நியமனத்துக்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் கண்ணூர் பல்கலைகழகத்தில் மலையாளம் துறையில் இணை பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்த பதவிக்கு மொத்தம் 6 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் துணை வேந்தர் தலைமையிலான தேர்வு கமிட்டி விண்ணப்பத்தை பரிசீலித்து தர வரிசைபட்டியலை வெளியிட்டது. இதில் பிர்யா வர்கீஸ் என்பவர் தேர்வு செய்யப்படடார். இவர் முதலமைச்சர் பினராயி விஜயனின் தனிச்செலயரான கே.கே. ராகேஷின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரியா வர்கீஸ் தேர்வு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கேட்டதில் பிரியா பெற்ற மதிப்பெண் மிகவும் குறைவு என்பது தெரியவந்தது. அதேபோல், அவரை விட அதிக மதிப்பெண் பெற்றவர் ஜோசப் ஸ்கேரியா என்பதும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்தது. இதையடுத்து முதல்வரின் தனிச்செயலர் என்ற செல்வாக்கை பயன்படுத்தி முறைகேடாக பணி நியமம் செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து பணிநியமனத்தில் முறைகேடாக பிரியா வர்கீசை நியமித்தது தொடர்பான புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரையடுத்து மாநில பல்கலை கழகங்களுக்கான வேந்தரான கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், கடந்த வாரம் பிரியா வர்கீஸ் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து பல்கலை சிண்டிகேட் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், பிரியா வர்கீசின் நியமனத்திற்கு கேரள உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு வழக்கை வரும் 31-ந்தேதி ஒத்தி வைத்தது.
source https://news7tamil.live/chief-ministers-private-secretarys-wifes-job-as-professor-high-court-banned.html