ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

34வது கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கியது!

 

பெருநகர சென்னை மாநகராட்சியில் 34வது கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் 34 ஆவது மெகா கொரோனா தடுப்பூசி முகாமினை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் கோவிட் தடுப்பூசி செலுத்துவது ஒரு பேரியக்கமாக நடத்தப்படுகிறது. 12.09.2021 முதல் கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் 33 கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற 33 மெகா தடுப்பூசி முகாம்களில் இதுவரை 41,26,183 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவிட் தடுப்பூசி செலுத்தத் தகுதியுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களில் 55,46,797 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 48,13,470 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், 15 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களில் 226,495 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 1,79,909 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும், 12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களில் 1,29,051 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 86,812 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி 5,08,124 நபர்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று பெருநகர சென்னை மாநகராட்சியில் 34வது கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் 34 ஆவது மெகா கொரோனா தடுப்பூசி முகாமினை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியானது 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், இணை நோயுடைய நபர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. தற்பொழுது, 75 நாட்களுக்கு அதாவது வருகின்ற செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து தரப்பினருக்கும் விலையில்லாமல் தடுப்பூசி செலுத்தத் தமிழ்நாடு அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற சமுதாய நல மையங்கள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இதன் மூலம் கோவிட் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி: ‘சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாட்டிற்கு உள்ள வாய்ப்புகள் என்ன தெரியுமா? – புனே, இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் முடிவுகள்’

மேலும், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசியினை 2 தவணைகள் செலுத்திக் கொண்டு 6 மாதங்கள் (அ) 26 வாரங்கள் கடந்த நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தத் தகுதியுடையவர்கள். இவர்களுக்கு கார்பெவேக்ஸ் தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியாகச் செலுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் இதுவரை 43,05,346 நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தத் தகுதியுடைய நபர்களாக உள்ளனர். இவர்களில் 5,08,124 நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மட்டுமே 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியானது நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சமுதாய நலமையங்களில் இலவசமாகச் செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

source https://news7tamil.live/34th-covid-mega-vaccination-special-camp-begins.html