27 8 2022
FCI recruitment 2022 for 123 Manager posts apply soon: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய உணவு கழகத்தில் மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய உணவுக் கழகத்தில் பொது, டெபோட், இயக்கம், கணக்கியல், தொழில்நுட்பம், சிவில் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவுகளில் மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 113 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 26.09.2022க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Manager (General)
காலியிடங்களின் எண்ணிக்கை : 19
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.08.2022 அன்று 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 40000- 140000
Manager (Depot)
காலியிடங்களின் எண்ணிக்கை : 15
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.08.2022 அன்று 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 40000- 140000
Manager (Movement)
காலியிடங்களின் எண்ணிக்கை : 6

Manager (Accounts)
காலியிடங்களின் எண்ணிக்கை : 35
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.com மற்றும் MBA படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.08.2022 அன்று 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 40000- 140000
Manager (Technical)
காலியிடங்களின் எண்ணிக்கை : 28
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Sc. in Agriculture OR B.Tech degree or B.E degree in Food Science OR B.Tech degree or B.E degree in Food Science & Technology or Food Technology or Food Processing Technology or Food Process Engineering or Food Processing or Food Preservation Technology OR B.Tech. degree or BE degree in Agricultural Engineering OR B.Tech degree or B.E degree in Bio-Technology or Industrial BioTechnology or Bio-Chemical Engineering or Agricultural Bio-Technology படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.08.2022 அன்று 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 40000- 140000
Manager (Civil Engineering)
காலியிடங்களின் எண்ணிக்கை : 6
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Civil Engineering படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.08.2022 அன்று 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 40000- 140000
Manager (Electrical Mechanical Engineering)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Electrical Engineering or Mechanical Engineering படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.08.2022 அன்று 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 40000- 140000
Manager (Hindi)
காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஹிந்தி பாடத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.08.2022 அன்று 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 40000- 140000
வயது வரம்பு தளர்வு : SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.recruitmentfci.in/current_category_two_main_page.php?lang=en என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.09.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.recruitmentfci.in/assets/current_category_II/Advt.%20No.02-2022-FCI%20Category-II.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
source https://tamil.indianexpress.com/education-jobs/fci-recruitment-2022-for-123-manager-posts-apply-soon-500873/